கனடாவின் கடன் அட்டை கட்டணங்கள் நியாயமாக உள்ளதா ? - புகாரை விசாரிக்கிறது நீதிபதிகள் அவை
May 09 2012 05:37:49
கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்குவோரிடம் வணிகர்கள் வசூலிக்கும் செயல்முறைக் கட்டணங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை என மக்கள் பலர் புகாரளித்துள்ளனர். உலகிலேயே கனாடாவில் தான் கடன் அட்டைகளுக்கு அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுவதாகவும் வந்துள்ள புகார்களையடுத்து இவற்றை விசாரிக்கும் பணியில் அரசின் போட்டி செயலக நிதிபதிகள் அவை (federal Competition Bureau tribunal) ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த நிதிபதிகள் அவையின் (தீர்ப்பாயத்தின்) முதற்கட்ட விசாரணைகள் ஒட்டாவாவில் துவங்கியது.
கனடிய போட்டி கண்காணிப்பு அமைப்பு ஒன்றினைச் சார்ந்த கென்ட் தொம்சன் நேற்று தீர்ப்பாயத்தில் இந்த விடயம் குறித்து பேசினார் கடன் அட்டை மூலம் பொருடகள் வாங்குவதை சில்லறை வர்த்தகர்கள் அனுமதிக்கும் போது பெறப்படும் கட்டணங்கள் போட்டி விதிமுறைகளுக்கு மாறாக மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் மூலம் கடன் அட்டைத் துறை ஆண்டொன்றுக்கு $5 பில்லியன் அதிகமாக வருமானமீட்டி வருகிறது எனவும் அவர் கூறினார்.
கனடாவின் கடன் அட்டைத் துறை மிக வக்கிரமான நிலையில் சென்று கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட தொம்சன் கடன் அட்டைகளை ஏற்றுக் கொள்ள வியாபாரிகள் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய நிலை கனடாவில் இருப்பதால் பின்னர் இந்த செலவுத் தொகை நுகர்வோரிடமிருந்து பெறப்படுகிறது எனவும் அவர் விளக்கப்படுத்தியுள்ளார். முக்கியமாக விசா - மாஸ்டர் கார்டு ஆகியவை விதிமுறைகளுக்கு மாறாக அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து வருவதும் தீர்ப்பாய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >