கனடிய பிரஜை ஒருவர் வடமராட்சியில் கடத்தப்பட்டுள்ளார்
Jul 27 2012 09:43:44
யாழ்ப்பாணம் சென்றிருந்த கனேடிய பிரஜை ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யபப்பட்டுள்ளது.வடமராட்சியின் வதிரி கரவெட்டியை சேர்ந்தவரான 53 வயதுடைய நடராசா ஜெகநாதன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.
தனது தம்பியாராது மகனது திருமணத்திற்காக சுமார் 25 வருடங்களின் பின்னர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வந்திருந்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில் நேற்று மாலை 4.00 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.ஆயினும் கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவரை விசாரணைக்கு கொண்டு சென்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக கனடாவிற்கு புலம் பெயர்ந்திருந்த நிலையில் ஜெகநாதன் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக குடும்பத்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
புலம் பெயர்ந்து பின் நாடு திரும்பிய கனேடிய பிரஜை ஒருவர் அண்மையிலே கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ் ஆட்கடத்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Jun 20 2013 00:52:35 [Canada]
டொரண்டோவின் லிபரல் கட்சி எம்.பி Bob Rae இன்று திடீரென தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும், மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.35 ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்த Bob Rae, இன்று Parliament Hill
Read More >
Jun 19 2013 10:04:52 [Canada]
கால்சியம் குறைபாட்டினால் எலும்புகள் வலுவிழக்கும் நோயான ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகளை பயன்படுத்தி பெண்களின் மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை
Read More >
Jun 19 2013 00:30:50 [Canada]
தற்போது அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்களைக் களைய கல்வி முறையை மேம்படுத்துவது ஒன்றே சரியான வழி என்று தன்னுடைய கருத்தைத் ஆணித்தனமாகத் தெரிவித்துள்ளார் மிஸ்
Read More >
Jun 18 2013 23:54:08 [Canada]
சமீப காலமாகவே அதிகரித்து வரும் தீவிரவாதங்களை இஸ்லாமிய மதத்துடன் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவது தங்களுக்கு மன வருத்தத்தையும் . மத நம்பிக்கையையும் இழிவு படுத்துவது போன்று உள்ளதால் இது
Read More >
Jun 18 2013 23:51:59 [Canada]
எதிர்வரும் கோடைக்காலத்தின் போது ஒன்ரோறியோவில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருப்பதைத் தொடர்ந்து லிபரல் ஆட்சியின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி வாக்கினைப் பெரும் நோக்கில்
Read More >
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பதவிக்கு வந்த சில
Read More >
Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்
Read More >
Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3
Read More >