48 மணி நேர தொடர்ச்சியான இசைமழை சாதனை நோக்கி பவதாரணியின் பாரதி கலைக்கோயில் மாணவர்கள்
Jul 04 2012 08:43:00
தொடர்ச்சியாக இடைவிடாது 48 மணிநேர இசை நிகழ்ச்சியை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் மாணவர்கள் கடந்த 30 திகதியிலிருந்து ஒத்திக்கையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்வில் வெற்றிகரமாக 48 நிறைவு செய்து தங்கள் குறிக்கோளில் வெற்றி பெற்றுள்ளனர்
60 பாடகர்கள், 30 இசைக் கருவி கலைஞர்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனைக்கு $ 100,000 நிதி வழங்கும் உன்னத பணிக்காக இவர்கள் சளைக்காமல் இந்த ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் என பாரதி கலைக் கூட இயக்குனர் மதிவாசன் இகுருவிக்குத் தெரிவித்துள்ளார்.
இளையோர் முதல் பெரியோர் வரை உள்ள இந்த குழுவில் இடைநிலை மாணவர் தொடக்கம் பட்டபின் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும் ஆர்வத்துடன் பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது.
2008 ஆம் ஆண்டு முதன் முதலாக பாரதி கலைக் கோயில் மாணவர்கள் தொடர்ச்சியாக் 24 மணித்தியாளங்கள் இடைவிடாத இசை நிகழ்வின் மூலம் $ 39,000 களை சேகரித்து ரூஜ் ரிவர் மருத்துவமனைக்கு நிதி உதவியாக வழங்கி இருக்கின்றார்கள். பின்னர் 2010 ஆண்டு மார்ச் மாதம் இக் கலைக் கல்லூரியின் நிறுவனர் பவதாரணியின் 21 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட இசைநிகழ்ச்சி மூலம் $ 15,000 களை ரொறொண்ரோ மார்க்கிரட் புற்று நோய் மருத்துவமனைக்கும், அதே ஆண்டு ஒகஸ்ட் மாதம் கனடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து $ 4,000 களை புற்று நோய் ஆராய்ச்சிக்காகவும் இவர்கள் வழங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் செப்டம்பர் மாதம் நிகழவுள்ள 48 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் $ 100,000 சேகரித்து தமிழர்கள் செரிந்து வாழும் மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வழங்க இளம் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் நித்திரையினையும் துறந்து ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன்ர்.
2009 ஆம் பாரதிக் கலைக்கோயில் மாணவர்கள் 26 பேர் தொடர்ச்சியாக 56 மணி நேர இசை ஒத்திக்கை செய்திருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் இது அரங்கேற்றப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >
May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்
Read More >
May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து
Read More >
May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்
Read More >
May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு
Read More >
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Read More >
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக
Read More >