பதவி விலகினார் மாநகர முதல்வர் றொப் போர்ட்டின் தலைமைப் பணியாளர் அமீர்
Jul 09 2012 07:28:31



மாநகர முதல்வர் றொப் போர்ட்டின் தலைமைப் பணியாளர் பதவியை வகித்து வந்த அமீர் ரெம்டுள்ள ரொறொன்ரோ பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளுக்கான துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை ஒழுங்கு படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக மேயர் அலுவலகத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக  அறிவித்துள்ளார். ஜூலை 20 ஆம் திகதியே சிட்டி ஹாலில் அமீர் பணியாற்றும் கடைசி நாளாக இருக்கக் கூடும் எனவும் தெரிகிறது. 

இதையடுத்து அமீரின் பதவி விலகல் தொடர்பாக றொப் போர்ட் நேற்று ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அமீருடன் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாகவும் , தலைமைப் பணியாளராக சிறப்பாக பணிபுரிந்த அவர் இனி வரும் காலங்களில் ஏற்கவிருக்கும்  பொறுப்புக்களிலும் திறம்படச் செயலாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மாநகர முதல்வராக றொப் போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தலைமைப் பணியாளர் பதவியை வகித்த இரண்டாவது நபர் அமீர். 2010 ல் றொப் போர்ட் மாநகர முதல்வராக பதவியேற்ற போது நிக் கௌவளிஸ் என்பவர் இப்பதவியை வகித்து வந்தார். சில மாதங்களே அவர் பதவியில் நீடித்தார். அவருக்குப் பின்னர் ரொறொன்ரோவின் மிக முக்கியப் பொறுப்புக்களில் ஒன்றாக கருதப்படும் தலைமைப் பணியாளர் பதவியேற்ற அமீர் வாரத்தின் ஏழு நாட்களிலும் கடுமையாக உழைத்துள்ளார் என பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

யாருமே எதிர்பாராத வகையில் ஊழியர் சங்கங்களுடனான பேச்சு வார்த்தைகளை றொப் போர்ட் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர காரணமாக இருந்தவர் அமீர் . சமீப காலமாக தனக்கு ஏற்பட்டு வந்த அழுத்தங்களால் தான் அமீர் பதவி விலகியுள்ளார் என்பதும்    தெரிய வந்துள்ளது. அமீருக்குப் பின்னர் அடுத்ததாக இந்த பதவியினை வகிக்கப் போகும் நபர் யார் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

 
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >

May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி

Read More >

May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்

Read More >

May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்

Read More >