நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?

தமிழர்களால் நீதன்  காப்பாற்றப்படுவாரா ?
ஒக்டோபர் மாதம் 22ம் திகதி, திங்கட்கிழமை ரொறன்ரோ மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. வழமையாக நடைபெறுகின்ற தேர்தலைவிட  இம்முறை நடைபெறும் தேர்தல் சிறிது வேறுபட்டிருக்கின்றது.
தேர்தல் நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகத்தான், 47 ஆக  இருந்த மாநகரசபை வாட்டாரங்கள், அரைவாசியாகக் குறைக்கப்பட்டு, மாநகரசபை வட்டார எல்லைகள் விரிவு படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
சென்ற வருடம் 42ம் வட்டாரத்துக்கு, அதிகமான வாக்குகளினால் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதன் சண், அதே வட்டாரம் மாற்றப்படாமலிருந்தால் வெற்றிவாய்ப்பு  இலகுவாக  இருந்திருக்கும். தற்போது வட்டாரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், நீதன் சண் வெற்றிபெறுவதற்கு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
புதிய வட்டார விரிவாக்தின் மூலம், முன்னர் நீதன் சண் அவர்களுக்கு ஆதரவாக  இருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு, வேறு வட்டாரத்துடன் சேர்க்கப்பட்டிருப்பதும், பல்லாயிரக்கணக்கான, முன் அறிமுகம் இல்லாத வாக்காளர்கள் புதிய வட்டாரத்தில் சேரர்க்கப்பட்டிருப்பதும் பாரிய சவாலாக உள்ளது.
shanjஸ்காபுரோ ரூச் பார்க் (வட்டாரம் 25) (Scarborough Rouge Park) (Scarborough Rouge Park) தொகுதியில் வாழும் தமிழ் வாக்காளர்கள் யாவரும் தேர்தல் நாளில் வாக்கு சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிப்பதன் மூலம் அவரின் வெற்றியை நிச்சயமாக உறுதி செய்து கொள்ளலாம். அவரின் வெற்றியின் உறுதி வாக்காளர்களாகிய தமிழர்களின்  கைகளிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களின் வாக்கும்  இந்தத் தேர்தலில் மிகமிக அவசியம். சிலவேளை ரொறன்ரோ மாநகர சபையில் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய ஒரு வலிமைமிக்க தமிழ் பிரதிநிதியைத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பை நாம்  இழக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே 25ம் வட்டாரத்தில் உள்ள தமிழ் வாக்காளர் ஒவ்வொருவரும் தேர்தல் நாளன்று தவறாது வாக்கு சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் மட்டுமே நீதனை இம்முறை வெல்லவைக்கமுடியும் மாறு கேட்டுக்கொள்கிறோ.

10/19/2018

thipan

==========================================================

ஓகஸ்ட் மாத இகுருவி பத்திரிகையிலிருந்து

தமிழர்கள் செறிந்து வாழும் ரொரன்ரோ  நகரத்தில் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர்.
கனடாவின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயக் கட்சியின்  ஒன்ராறியோ மகாணத்தின் தவிசாளர் என்ற உயர் பதவியை வகித்த தமிழர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.neethan-shan2003ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் நீதன் ஷான்  இளம் வயதுடைய தமிழர்கள் கனேடிய அரசியில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
மார்க்கம் கல்விச் சபையிலும் ரொரன்ரோ கல்விச் சபையிலும் கல்விச் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டர்; மாணவர்கள் பெற்றோர் மற்றும் இள வயதினர் தொடர்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். அதன் காரணமாக ஏராளமான தன்னார்வத் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் கொண்டுள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் சமூக அக்கறையும் அதனை நோக்கிய செயல்பாடுகளும் ஏன் அவசியம் என்பதற்கு நீதன் ஷான்  சிறந்த உதாரணம்.
தற்போது ரொரன்ரோ நகர சபை உறுப்பினராக செயல்பட்டு வரும் நீதன் இந்த நகர சபையின் முக்கியமான செயல்பாட்டுக் குழுக்களில் பிரதான பங்களிப்பாளராக விளங்குகின்றார்.
குறிப்பாக ரொரன்ரோ நகர சபையும் இலங்கையின் வட மாகாண சபையும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதற்கும் அதற்கு செயல் வடிவம் கொடுத்தமையின் பின்னால் நீதன் ஷானின் கடுமையான உழைப்பு இருந்துள்ளது.
இந்த ஒப்பந்தந்தின் ஒரு பகுதியாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஊடாக வட பகுதியின் தொழில் முனைவோரின் உற்பத்திகளுக்கு கனேடிய சந்தை வாய்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் அமைந்துள்ளது.

வட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்திகளில் கனேடிய சந்தைக்குப் பொருத்தமான உற்பத்திகள் மற்றும் அதனை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்கள் தொடர்பான விபரக் கோவை ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக வட பகுதியில் உள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் தொடர்பான விபரங்களை கனடாவில் உள்ள நுகர்வோரும் வரத்தக சமூகத்தினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
இந்த நடவடிக்கையானது வட பகுதி வர்த்தக உற்பத்தியாளர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்று வடமாகாண வர்த்தக சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை ரொரன்ரோவில் உள்ள வர்த்தக உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு ரொரன்ரோ நகர சபை மூலமாக கிடைக்கக் கூடிய வரப்பிரசாதங்களை தெரியப்படுத்தும் விதமான கருத்தரங்குகள் சிலவற்றையும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கனடாவில் வாழும் எமது சமூகத்திற்கு மட்டுமன்றி தாய மக்களுக்குமான உதவிகளை வழங்குதற்கான திட்டங்களை  தனக்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை கொண்டு குறுகிய காலத்தில் மேற்கொண்டு வரும் நீதன் ஷானின் நடவடிக்கைகள் வரவேற்பிற்குரியவை.
பல பருவங்களாக ஒரே பதவியில் ஒட்டிக் கொண்டிருந்து விட்டு தனது சமூகத்திற்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பங்களிப்புகள் எதனையும் செய்யாமல் தனக்கு பின்னரும் அந்த பதவியினை வேறு எவரும் பெற்றுவிடக் கூடாது என கங்கணம் கட்டி நிற்கும் ஒரு சிலர் மத்தியில் நீதன் வித்தியாசம் காட்டி நிற்கின்றார்.
எமத சமூகத்தில் இருந்து ஆளுமை மிக்க தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வரும் நீதன் போன்றவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களை எமது சமூகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஏனைய சமூகங்களுக்கு கிடைத்து வரும் நகர சபையின் வரப்பிரசாதங்கள், ஆலோசனைகள் மற்றும் உதவிகளை தெற்காசிய சமூகங்களும் பெறுவதை உறுதிப்படுத்துவதில் நீதன் ஷான் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்த பதவிக்காலத்தில் அவர் முன்னெடுத்து வரும் சிறப்பான திட்டங்கள் தொடர்வதற்கும் இன்னும் பல புதிய திட்டங்களை ரொரன்ரோவில் வாழும் பல்லின சமூகங்கள் பெறுவதற்கும் ஆழுமையும் அர்ப்பணிப்பும் மிக்க நீதன் ஷான் மீண்டும் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழ் சமூகம் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை தற்போதுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு போன்ற காரணிகள் நீதன் ஷானின் வெற்றியில் கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே நீதன் ஷானின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அவருடைய வட்டாரத்தில் உள்ள வாக்களிக்கும் தகுதி வாய்ந்த தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்ட வாக்களிப்பது முக்கியமானது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சமூகத்துடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் தேர்தல் காலங்களில் தீடிரென முளைக்கும் அரசியல் தலைகளும் வால்களும் போல் அல்லாமல் முழு நேரமாக அரசியலிலும் சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வரும் நீதன் ஷான் அவர்களை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நகர சபைத் தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்
ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 

 


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *