சிரியா உள்நாட்டுப் போரில் ஒரே நாளில் 94 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

siriya-2002சிரியாவில் 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தொடங்கியது.

இந்தப் போரினால் அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகள் 2015–ம் ஆண்டில் இருந்து வான்தாக்குதல் நடத்தி வருகின்றன.

மற்றொரு புறம் சிரியா அதிபர் படைகள் ரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அதிபர் படைகள் கூறினாலும், அதில் பெருமளவு சிக்கி பலியாவது அப்பாவி மக்கள்தான் என்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

‘‘7 ஆண்டுகள் முடிந்து, 8–வது ஆண்டை எட்டிப்பிடிக்கிற நிலையில் உள்ள சிரியா உள்நாட்டுப் போரில் மிகப் பயங்கரமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. பல தரப்பில் இருந்தும் நடத்தப்படுகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். பல லட்சம் பேர் வீடுகளை விட்டு விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர். குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்’’ என்று ஐ.நா. சபை கடந்த வாரம் கவலை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் வசம் கவுட்டா பகுதி இருந்து வருகிறது. 4 லட்சம் பேர் வசிக்கிற இந்த நகரை மீட்டு விட வேண்டும் என்று அதிபர் ஆதரவு படைகள் கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தாக்குதலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அப்பாவி மக்கள் 94 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 18 பேர் குழந்தைகள் ஆவார்கள். இந்த தகவலை இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ளது.

இந்த ஒரு நாள் தாக்குதலில் அப்பாவி மக்கள் 470 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.

மேலும் உள்ளூர் சிவில் ராணுவ குழு சார்பில் கூறுகையில், கிழக்கு கவுட்டா பகுதியில் அமைந்து உள்ள சக்பா, ஜிஸ்ரீன் மற்றும் பிற நகரங்களில் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி உள்ளன. பீரங்கி தாக்குதலும் நடைபெற்று உள்ளது என்றனர்.

பய்லாக் அல் ரகுமான் கிளர்ச்சியாளர்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் வாயல் ஒல்வான் கூறும்போது, ‘‘நாள் முழுவதும் கடுமையான குண்டுவீச்சு நடந்தது. தரைவழி தாக்குதலோ, மோதல்களோ இல்லை’’ என்றார்.

கவுட்டா பகுதியில் அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் அங்கு உள்ள மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கூட்டம், கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றனர்.


Related News

 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
 • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *