827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு

உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

உத்தர்காண்ட் ஐகோர்ட், செப்டம்பர் 27 அன்று 850 ஆபாச இணையதளங்களை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பெற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(Meity) நடத்திய ஆய்வில், 30 இணையதளங்களில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய, மத்திய தகவல் தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தொலைதொடர்பு துறை பிறப்பித்த உத்தரவு: உத்தரகாண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், Meityயின் வழிமுறைகளின்படி, 827 ஆபாச இணையதளங்களையும் இணையதள சேவை நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


Related News

 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *