லஞ்சம் கொடுத்த 45 சதவீத இந்தியர்கள் – ஆய்வில் தகவல்

Thermo-Care-Heating

indian_moneyகடந்த வருடம், 45 சதவீத இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வு ஒன்றி்ல தெரிய வந்துள்ளது.

ஆய்வை நடத்திய டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் என்ற அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 37 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளது எனவும், 14 சதவீதம் பேர் ஊழல் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். நிலைமை எதுவும் மாறவில்லை என 45 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் ஊழல் மோசமாக உள்ளதாக 71 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஊழல் அதிகரித்துள்ளதாக மகாராஷ்டிராவில் 18 சதவீதம் பேரும், டில்லியில் 33 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நிலைமை மாறவில்லை என மகாராஷ்டிராவில் 64 சதவீதம் பேரும், டில்லியில் 38 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். உ.பி.,யில் ஊழல் குறைந்துள்ளதாக 21 சதவீதம் பேர் கூறியள்ளனர்.

கீழ்மட்ட அதிகாரிகள் தான் அதிகளவில் லஞ்சம் வாங்குகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ், சொத்து, வரி, மின்சாரம், பத்திரபதிவு, டெண்டர் போன்றவற்றிற்கு 84 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். பிஎப், வருமான வரி சேவை வரி, ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு 9 சதவீதம் பேரும், தனியார் நிறுவனத்திற்கு 2 சதவீதம் பேரும், பள்ளியில் குழந்தைகள் சேர்க்க, தொண்டு நிறுவனங்கள், கோர்ட்களுக்கு 5 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். 51 சதவீதத்தினர் ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ideal-image

Share This Post

Post Comment