சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கார் திடீரென்று தீப்பிடித்த சம்பவம்

ekuruvi-aiya8-X3

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நடுரோட்டில் கால் டாக்சி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 3 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு 7.05 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கால் டாக்சியில் இருந்து கரும்புகை வெளியேறியது.call_taxi_fire

இந்தநிலையில் சிக்னல் போடப்பட்டதால், கால் டாக்சி டிரைவர் சிக்னலை மீறி காரை ஓட்டி சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நிறுத்தினார். உடனடியாக காரில் இருந்த 3 பயணிகளையும் காரில் இருந்து வெளியேற்றினார்.
சிறிது நேரத்தில் கார் திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதுபற்றிய தகவலறிந்து பூக்கடை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அருகில் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு பயன்படுத்த தயாராக இருந்த மெட்ரோ லாரி தண்ணீரை கொண்டு கால் டாக்சியில் பற்றியிருந்த தீயை அணைத்தனர்.

பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார்கள். கால் டாக்சியில் உள்ள ஏ.சி. கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share This Post

Post Comment