வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து மலையகத்தில் முடிவுற்ற புதிய வெளிச்சம்

வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து மலையகத்தில் முடிவுற்ற Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட புதிய வெளிச்சம் இலங்கைத்தீவின் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்ற புதிய வெளிச்சம் நிகழ்வு குறித்த கருத்துப் பகிர்வும் மக்கள் சந்திப்பும் 17 Oct 2016 மாலை 7.00 PM அன்று கனடா ,ஸ்காபோரோவில் அமைந்துள்ள Estate banquet hall இல் நடைபெற்றது . அதில் வழங்கப்படட ஊடக அறிக்கை

“புதிய வெளிச்சம்”

இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்வைத்தீவு கிளிநொச்சி, மன்னார் மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளது “புதிய வெளிச்சம்”.

போரின் பேரழிவிற்குப் பின்னர் எங்களில் பலர் மனதிலும் எழுந்த அடுத்தது என்ன என்ற கேள்வியின் பதிலாகத்தான் “புதிய வெளிச்சம்” உருவானது.

அக இருள் விலகணும்!

அகவெளி திறக்கணும்!

புதிய வழி பிறக்கணும்!

தமிழ் இனம் சிறக்கணும்!

என்ற தாரகமந்திரத்தோடு “புதிய வெளிச்சம்” தன் பயணத்தை ஆரம்பித்தது.

இப்பயணத்தில் முக்கிய விடயமான உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் தர முன்வந்தார்.

ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரம் மாணவர்களையும் மக்களையும் சென்றடைய முடிந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொதுவான உளவியல் ஆற்றுப்படுத்துகை உரைகளையே வழங்கியிருந்தோம். ஆனால் உண்மையில் அங்கே உள்ள பாதிப்புகளும் தேவைகளும் வகைப்படுத்தப்பட்டு மிகவும் நுணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றிவேண்டியதன் அவசியத்தை நேரில் கண்டோம்.

குறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது.

அதே சமயம் சிறப்பான சுயதொழில் முனைவோரையும், ஆரோக்கியமான பெண்தலைமைத் துவங்களையும் தூரநோக்குக் கொண்ட சிந்தனையாளர்களையும் கூடவே கண்டோம். இவர்களில் போராளிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயம்.

இப்பயணம் மூலம்பெற்ற அனுபவமும் அறிவும் மிகவும் முக்கியமானவை. வேறுமனே கண்மூடித்தனமாக இருக்காமல் பிரச்சனைகளை சரியாக இனம் கண்டு தேவைகளையும் உதவிகளையும் முறையக திட்டமிடாமல் போனால் மீண்டும் ஒரு பேராபத்து எம்மை வந்தடையும் என்பதை உணர்கிறோம். இது தொடர்பாக எம்மி டையே ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே உங்களை இன்று சந்திக்கின்றோம்.

இன்றைய சந்திப்பின்மூலம் ஆரம்பப் புள்ளியாக பின்வரும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

1)சமூக , கல்வி ,பொருளாதாரத்தில் உள்ள உளவியல் பிரச்சனைகளை இனங்கண்டு வகைப்படுத்தல்.

2) இவற்றை நிறைவு செய்யும் வழிகளை கண்டடைந்தல்.

3) இவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து முடித்தல்.

இனி என்ன என்ற கேள்வியை பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னாலேயே விடுகின்றோம்.

நவஜீவன் அனந்தராஜ்

”புதிய வெளிச்சம்”
416.272.8543mahal makalirmakkkkk makalirdd

DSC06898  DSC08960 IMG_0982 IMG_1080 IMG_1200 IMG_1745 IMG_1800 IMG_1900 IMG_2106 IMG_2110 IMG_2281 IMG_2398DSC_1052 IMG_1144 IMG_2449 IMG_2459 IMG_2556 IMG_2601 IMG_3160 zIMG_10251

2

3

5

மட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.

புதிய வெளிச்சம் – 20 நாட்கள் 18 பெரும் நிகழ்வுகள் 10,000 ற்கு மேற்ப்படடவர்கள் பங்கேற்ப்பு

1) வல்வை மகளிர் மகா வித்தியாலயம்(Teenager )
2) ஹாட்லிக் கல்லூரி (Teenager )
3) மெதடிஸ் கல்லூரி (Teenager )
4 ) புதுக்குடியிருப்பு – போரரால் பாதிக்கப்படட பெண்கள்
6) முல்லைத்தீவு – போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் .
7) கிளிநொச்சி போரால் பாதிக்கப்படடவர்கள்
8) இணுவில் பொது வாசிகசாலை
9 ) நல்லூர் மணிமண்டபம் – International day of Non-violence
10) வீரசிங்கம் மண்டபம்
11) சுய உற்பத்தி பொருளாதார மேம்படுகை கண்காட்சி சந்திப்பு – கிட்டு பூங்கா
12) யாழ் இந்துக் கல்லூரி (Teenager )
13) கோப்பாய் ஆசிரியர் பயிற்சி சாலை
14) மன்னார் போரினால் பாதிக்கப்படட மக்கள்
15) திருகோணமலை இந்துக் கல்லூரி (Teenager )
16) மடடக்களப்பு போரினால் பாதிக்கப்பட்டமக்கள் (தேவநாயகம் மண்டபம் ,அரசடி )
17) மடடக்களப்பு நான்கு பெண்கள் பாடசாலையிலிருந்து (Teenager only )
18) ஹட்டன் ஆசிரிய பயிற்சி கல்லூரி
19) 5ற்கு மேற்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் (Private )

மட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.

நவஜீவன் அனந்தராஜ்

A416 272 8543


Related News

 • சர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
 • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
 • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
 • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
 • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
 • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
 • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
 • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *