ராஜஸ்தானில் போர் விமானம் விபத்தில் சிக்கியதில் மூவர் காயம்

Rajastan15இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில்  வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஷிவ்கார் கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்னதாக விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி அந்த கிராமத்தை சேர்ந்த நாராயண் ராம் என்பவரும், அவருடைய மருமகளும், பேரனும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் விமானங்கள் 1997-ம் ஆண்டு விமானப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது, அதிலிருந்து ஏற்பட்ட 7வது விபத்து இதுவாகும். இந்தியா 272 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து பெற ஒப்பந்தம் செய்து உள்ளது, இதுவரையில் 230-க்கும் மேற்பட்ட விமானங்கள் விமானப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment