மார்க்கம் - ஸ்டீல் பகுதியில் தமிழர் ஒருவரின் வீடு தீக்கிரை, மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி! ( காணொளி)
Jul 13 2012 16:07:48

வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவில் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீப்பிழம்பு காரணமாக மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வீடு பாரிய சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் வெளியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று வாகனங்கள் முற்றாக தீக்கிரையாகியிருப்பதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீல் அவெனியூ- மார்க்கம் றோட்டுக்கு அண்மையில் ஈஸ்ட்வல் ட்ரைவ்வில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான வீடே தீக்கிரைக்கானது. இதில் குழந்தைகள் உட்பட 12 பேர் இருந்தார்கள். இவர்களில் 6 பேர் விருத்தினராக தங்கியிருந்தார்கள் எனவும் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த மூவருக்குமே காயம் ஏற்பட்டதாகவும், இவர்களை வீட்டின் உரிமையாளரினால் வெளியேக் கொண்டுவரப்பட்ட பின் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அறிய வந்துள்ளது.

இவர்களில் ஒருவர் தீக் காயங்களுடன் ரொறொண்ரோ மருத்துவமனையிலும், மற்றைய இருவரும் புகையினை உட்சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் தாமதமாக வந்தனர் எனவும் இதனால் தான் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், மீட்புப்படையினர் வராமல் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வரவில்லை எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கார் தரிப்பிடத்தினுள் (காராஜ்) ஏற்ப்பட்ட தீ வெடிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் $ 900,000 ஆக இருக்கும் என மதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மார்க்கம் 7 ஆம் வட்டாரத்துக்குச் சேர்ந்த பகுதியாக இருப்பதனால் நகரசபைத் தலைவர் திரு லோகன்  கணபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கள் தெரிவித்துள்ளார்

 

 

 

 
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்

Read More >

May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்

Read More >

May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்

Read More >

May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்

Read More >

May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read More >

May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,

Read More >

May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >