ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கிர்கக் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. எண்ணைய் வளம் மிக்க அந்தப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் ஹவைஸ் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இரண்டு முகாம்களும் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஈராக் நாட்டின் மூன்றில் ஒருபகுதியை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் வெற்றி கிடைத்ததாக ஈராக் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இருந்த போதிலும், அந்த நாட்டில் பல இடங்களில் ஈராக் அவ்வப்போது ”ஸ்லீப்பர் செல்கள்”  என கூறப்படும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல்களை அரங்கேற்றுகின்றன.

Related News

 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *