உலகம் உண்மையை இனிமேலும் அறியட்டும் – சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதம்

ekuruvi-aiya8-X3

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்

வீ. ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதம்

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்­டுகள் கடந்து விட்­டன. நீங்கள் உரு­வாக்­கி­ய­தாக சொல்­லப்­ப­டு­கின்ற அரசு செயற்­படத் தொடங்கி 20 மாதங்கள் ஆகி­விட்­டன. மக்­க­ளி­ட­மி­ருந்து பலாத்­கா­ர­மாக பெறப்­பட்ட காணிகள் தொடர்ந்தும் இழு­பறி நிலை­யில்தான். கிளி­நொச்சி நகரின் முத­லா­வதும், முக்­கி­ய­மா­ன­து­மான கிராமம் பர­விப்­பாஞ்சான். இக்­கி­ராமம் இரா­ணு­வத்­தி­னரின் தலைமை செய­ல­க­மாக செயற்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய அலங்­கோ­லங்­க­ளுக்கு முடி­சூட்­டு­வது போல் யுத்­தத்தால் அடைந்த துன்­பங்கள், கஷ்­டங்­கள், இழப்­புக்கள் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தியில் பொது­மக்­களின் நிலம் 617 ஏக்கர் முள்­ளி­வாய்க்கால் மக்­க­ளி­ட­மி­ருந்து இன்றோ நாளையோ பறி­போ­க­வுள்­ளது. இதி­லி­ருந்து நீங்­களும் உங்கள் சகாக்­களும் எதனைச் சாதித்து விட்­டோ­மென தம்­பட்­ட­ம­டிக்கப் போகின்­றீர்கள். என்னால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட பல­வற்றில் ஒன்­று­கூட உங்­களின் கவ­னத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வில்லை. நாம் ஒன்­று­ப­டுவோம் என்று குறைந்த பட்சம் பத்து தட­வை­க­ளுக்கு மேல் கோரிக்கை விடுத்தும் இன்­று­வரை எது­வித நட­வ­டிக்­கையும் நீங்கள் எடுத்­த­தாக இல்லை. எம் மக்­க­ளுக்கு நான் எவ்­வித குற்­றமும் செய்­ய­வில்லை.

ஆனை­யி­றவை பிடிக்க முடி­யுமா என பாது­காப்பு அமைச்­ச­ருக்கு பாரா­ளு­மன்­றத்தில் சவால் விட்­டவன் நான். உண்மை அவ்­வாறு இருக்க ஆனை­யி­றவை இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று நான் கூறி­ய­தாக உண்­மைக்கு புறம்­பான விட­யத்தைக் கூறி என்னை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லி­லேயே தோல்­வி­ய­டைய செய்த பெருமை குறிப்­பாக உங்­க­ளுக்கும் தம்பி சேனா­தி­ரா­சா­வுக்கும் உண்டு. உங்கள் கூற்றை விநா­ய­க­மூர்த்தி அவர்கள் உண்மை என ஒப்­பிப்­பா­ரே­யானால் நான் அர­சி­யலில் இருந்து ஒதுங்கத் தயார். இதெல்லாம் பழங்­கதை. 12 ஆண்­டுகள் எனது சேவையை மக்­க­ளுக்கு மறுக்க வைத்த பெரு­மை­கூட உங்கள் இரு­வ­ருக்­குமே உண்டு. காலம் கடந்­தாலும் எம் போராட்­டத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற கார­ணத்­திற்­காக 12 ஆண்­டுகள் மௌன­மாக இருந்த நான் தொடர்ந்து மக்­க­ளுக்கு இனியும் மறைக்­காமல் நடந்­த­வற்றை ஒளிவு மறை­வின்றி இங்கே தர­வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­ட­மை­யா­லேயே தொட­ர­வுள்ள பல கடி­தங்­களில் முதற் கடி­த­மாக இக்­க­டிதம் வரு­கின்­றது.

நீங்கள் கட்­சியை விட்டு வெளியே­றி­யதன் பின்பு இன்­று­வரை தங்­க­ளுக்கு பல கடி­தங்கள் எழு­தி­யி­ருந்தும் ஒரு பதிலும் கிடைக்­க­வில்லை. இருப்­பினும் நான் தெரிவிக்­கின்ற விட­யங்­களில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் கொள்­கை­க­ளுக்கு குந்­தகம் ஏற்­ப­டக்­கூ­டிய உணர்­வூட்டும் விட­யங்­களை தவிர்த்து வந்­துள்ளேன்.

சரித்­திரம் என்­பது ஒரு நாட்டின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் நிகழ்­வு­களை வரிசைக்கிர­ம­மாக பதிவு செய்­யப்­ப­டு­வ­தோடு ஒரு நாட்டின் பெரும் தலை­வர்கள் பற்­றி­யதும் பல்­வேறு நிகழ்­வு­க­ளையும் பதி­வி­டு­வ­து­மாகும் என்­பது நீங்கள் அறி­யா­த­தல்ல. தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் வர­லா­று­கூட இந்த நாட்டின் அர­சியல் சரித்­தி­ரத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­ததை நீங்கள் அழித்­து­விட்­டீர்கள் என உங்கள் மீது நான் குற்றம் சுமத்­து­கிறேன் என்­ப­தோடு பெருந்­த­லை­வர்­க­ளான எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் கியூ.சி, ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் கியூ.சி, கௌரவ எஸ்.தொண்­டமான், திரு­வா­ளர்கள் அ.அமிர்­த­லிங்கம், மு.சிவ­சி­தம்­பரம் போன்ற பலரின் பெரும் சேவை­களும் மறைக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­வ­தாக உங்­க­ளுக்கும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும் இருந்த வர­லாற்றை நீங்கள் தெரிந்­தி­ருக்க வேண்டும். 1972ஆம் ஆண்டு மே, 14ஆம் திகதி தமிழர் விடு­தலைக் கூட்­டணி அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­ட­போது முத­லா­வ­தாக தமி­ழ­ரசு கட்­சியும், தமிழ் காங்­கிரஸ் கட்­சியும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் ஸ்தாபக தலைவர் கௌரவ.சாவே.ஜே.செல்­வ­நா­யகம், கௌரவ ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் ஆகி­யோரின் ஆசீர்­வா­தத்­துடன் ஒன்­றி­ணைந்­தன. அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்த நானும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் ஆரம்­ப­கால உறுப்­பி­ன­ராக இணைந்து கொண்­டமை உங்­க­ளுக்கு ஞாபகம் இருக்­கு­மென நினைக்­கிறேன்.

அன்­றைய தினம் மாலையில் நடை­பெற்ற பகி­ரங்க கூட்­டத்­திற்கு நீங்கள் சமுகம் தந்­தி­ருந்த போதிலும் நீங்கள் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியில் இணை­ய­வில்லை. ஏனெனில் நீங்கள் இவ்­விரு கட்­சி­க­ளிலும் அங்­கத்­துவம் வகிக்­க­வில்லை.

1977ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதுதான் நீங்கள் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் வேட்­பா­ள­ராக இணைந்து கொண்­டீர்கள். இத் தேர்­தலில் நாம் 17 பேர் வெற்­றி­பெற்ற போதிலும் ஒருவர் மட்டும் தோல்­வி­ய­டைந்தார். யாரால் இத் தோல்வி ஏற்­பட்­டது என்­பதை உங்­க­ளுக்கு உங்கள் மனச்­சாட்சி சான்று பகிரும்.

26.-04-.1977 இல் தந்தை செல்வா அம­ரத்­து­வ­ம­டையும் வரை நீங்கள் தமி­ழ­ரசு கட்­சியில் அங்­கத்­த­வ­ராக இருக்­க­வில்லை என்­பது தெளிவா­கி­றது. அவ­ரது இறப்­புடன் தமி­ழ­ரசுக் கட்சி ஏறக்­கு­றைய செய­லற்­ற­தா­கவே இருந்­தது. ஆனால் தமி­ழ­ரசு கட்­சியின் பெய­ரையும் அதன் சின்­ன­மா­கிய வீடு சின்­னத்­தையும் எவ­ரேனும் துஷ்­பி­ர­யோகம் செய்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக அநே­க­மாக அன்று அக்­கட்­சி­யி­லி­ருந்த ஒரே­யொரு ஆரம்­ப­கால உறுப்­பி­னரும் அர­சி­யலில் தீவிர ஈடு­பாடு கொண்­டி­ருந்த அமரர் அ.அமிர்­த­லிங்கம் அவர்கள் தமி­ழ­ரசுக் கட்­சியின் பதிவை அமுலில் வைத்­தி­ருந்தார். அவரின் பாரியார் திரு­மதி மங்­கை­யற்­க­ரசி அமிர்­த­லிங்கம் அவர்கள் தனது கண­வரின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் முக­மாக அவர் இறப்­ப­தற்கு முன்னர் வெளியிட்ட அறிக்­கையின் ஒரு பகுதி இங்கு குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

“எனது கண­வரால் அர­சி­யலில் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளாக வளர்த்­தெ­டுக்­கப்­பட்ட சிலர் தமி­ழ­ரசு கட்­சி­யி­னு­டைய பெய­ரையும், அதன் சின்­னத்­தையும் துஷ்­பி­ர­யோகம் செய்யும் நோக்­கத்­தோடு அதனை புன­ர­மைப்பு செய்ய முயற்­சிப்­பது மிகவும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். எனது கணவர், அவர்கள் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கைக்கு துரோகம் செய்­கின்­றார்கள். ஆகவே மிக உறு­தி­யுடன் கூறு­வது தமி­ழ­ரசுக் கட்சி மீள்­பு­ன­ர­மைப்பு செய்­யப்­ப­டு­வதை நான் அங்­கீ­க­ரிக்­கவோ, ஆசீர்­வ­திக்­கவோ இல்லை என்­ப­தையும் அதற்கு மாறாக எமது பெருந் தலை­வர்­களால் உரு­வாக்­கப்­பட்ட தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை அழிக்கும் முயற்­சி­யாகும் என வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். இக் கட்­சியை இப்­போது புன­ர­மைப்பு செய்­துள்ள பெருந்­த­லை­வர்கள் யார் என்­பதை அறிய விரும்­பு­கிறேன்”.

நீங்கள் சில காலம் வகித்­து­வந்த தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் பதவி ஈழத்து காந்தி என அன்­புடன் அழைக்­கப்­பட்ட அகிம்­சையை கடு­மை­யாக கடை­ப்பி­டித்த கௌரவ எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட தமி­ழ­ரசு கட்­சிக்­கல்ல. நீங்கள் தலைமை தாங்­கிய அந்த தமி­ழ­ரசு கட்சி அகிம்சை கொள்­கைக்கு கட்­டுப்­ப­டாத கிளி­நொச்­சியில் வாழ்ந்த தங்கன் என்­ப­வரின் கட்­ட­ளைக்­க­மைய மாவை சேனா­தி­ராசா அவர்­களால் அதன் ஸ்தாபகர் தந்தை செல்வா இறந்து 26 ஆண்­டு­களின் பின் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இதன் விப­ரத்­தினை எனது அடுத்தக் கடி­தத்தில் அறி­யத்­த­ரு­கின்றேன்.

எமக்குள் உள்ள அபிப்­பி­ராய பேதங்­களை தயவு செய்து மறந்து எமது இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக கடு­மை­யாக சிந்­தி­யுங்கள். நான் எந்­த­வித பத­வி­யிலும் அக்­க­றை­கொண்­ட­வ­னல்ல. எனக்கு வேண்­டி­ய­தெல்லாம் விரைவில் எமது பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதே. அதன் முதற்­ப­டி­யாக நீங்கள் அணிந்­தி­ருக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்ற அங்­கியை அகற்றி விடுங்கள்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு விடு­தலைப் புலி­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது என்ற தவ­றான கருத்து புலம் பெயர்ந்த மக்கள் மத்­தியில் நில­வு­வதால் அந்தப் பெய­ருக்கு பெரும் செல்­வாக்கு உண்டு. ஆனால் ஆறு முக்­கிய தமிழ் பிர­மு­கர்­க­ளா­கிய திரு­வா­ளர்கள் வீ.கைலா­ய­பிள்ளை, கந்­தையா நீல­கண்டன், வீ.ஆர்.வடி­வேற்­க­ரசன், நிர்­மலன் கார்த்­தி­கேயன், எஸ்.தியா­க­ராஜா, கே.ஜெய­பா­ல­சிங்கம் ஆகி­யோரின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­தென்ற உண்மை நம் இரு­வ­ருக்கும் தெரியும். 22.-10-.2001 இல் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் திரு­வா­ளர்கள் ஆர்.சம்­பந்தன், டாக்டர்.என்.கும­ர­கு­ரு­பரன், என்.பிர­சன்னா, கே.பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் கட்­சி­களின் செய­லா­ளர்­க­ளாக தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமி­ழீழ விடு­தலை இயக்கம், ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி சார்பில் கையொப்­ப­மிட்­டனர். இந்த ஒப்­பந்­தத்­தின்­படி திரு­வாளர் மு.சிவ­சி­தம்­பரம் அவர்­க­ளுக்கு பின்னர் தேசி­யப்­பட்­டி­யலில் முத்­து­லிங்கம் அவர்­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தாக நீங்கள் உட்­பட கட்சி உத்­த­ர­வா­த­ம­ளித்­தி­ருந்­தது. திரு­வாளர் முத்­து­லிங்கம் அவர்­களின் விட்­டுக்­கொ­டுப்­பா­லேயே என்.ரவிராஜ் அவர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவானார்.

ஆனால் திரு. மு.சிவ­சி­தம்­பரம் அவர்­க­ளு­டைய சிதைக்கு தீ வைக்கும் முன்­பாக நீங்­களும், வேறு­மொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வன்­னிக்கு விரைந்து சென்று திரு.சு.ப.தமிழ்ச்­செல்வன் அவர்­களை சந்­தித்து முத்­து­லிங்கம் அவர்­களின் இடத்­துக்கு பதி­லாக உங்­க­ளுடன் தேர்­தலில் போட்­டி­யிட்டு இரண்­டா­வது இடத்­துக்கு தெரிவான துரை­ரட்­ண­சிங்கம் அவர்­களை நிய­மித்­தீர்கள்.

திரு­வாளர் துரை­ரட்­ண­சிங்கம் அவர்­க­ளுக்கு அந்­தப்­ப­த­வியை வழங்­கி­யமை எந்­த­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யா­த­வொன்­றாகும்.

உங்­க­ளு­டைய இந்த பிழை­யான நட­வ­டிக்­கைக்­காக உங்­களை தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யி­ருக்க வேண்டும். மேலும் என்­னுடன் சம்­பந்­தப்­ப­டாத விட­ய­மாக இருந்­தாலும் நான் உங்­க­ளுக்கு கூற விரும்­பு­வது அதே பிழை­யான வேலையை செய்து தமிழ் கூட்­ட­மைப்­புக்குள் இருந்த ஒற்­று­மைக்கு பங்கம் ஏற்­ப­டக்­கூ­டி­ய­தாக செய்­துள்­ளீர்கள். இவ்­வாறு நான் கூறு­வதை வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நான் அங்­கீ­க­ரிப்­ப­தாக எண்ண வேண்டாம். ஏனெனில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முறைப்­படி அமைக்­கப்­ப­டாது மோசடி மூலம் சில கட்சிகளை இணைத்து உருவாக்கி, அவைகளை புறந்தள்ளிவிட்டு சேனாதிராசா உருவாக்கிய தமிழரசு கட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றீர்கள்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தற்­போது முழுக்க முழுக்க தவ­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் அது தனது நாண­யத்தை இழந்து நிற்­கி­றது. விடு­தலைப் புலி­களால் அந்த அமைப்பு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தென்ற தப்­பான அபிப்­பி­ராயம் தமிழ் மக்கள் மத்­தியில் இன்றும் நில­வு­வதால் இதனை சாத­க­மாக பாவித்து நாம் பய­ன­டைய முற்­ப­டக்­கூ­டாது.

ஆனால் எனக்கு மிக மகிழ்ச்சி தரு­கின்­ற­வொரு விடயம் யாதெனில் அண்­மையில் நீங்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் இல்­லை­யென்­பதை பகி­ரங்­க­மாக ஒரு பேட்­டியில் ஒத்துக் கொண்­டதே. நாம் தொடர்ந்து எமது மக்­களை ஏமாற்­றாமல் எமது மக்­க­ளுக்­காக நியா­ய­மாக செயல்­ப­டுவோம்.

ஆகவே தய­வு­செய்து நீங்கள் அணிந்­தி­ருக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்ற அங்­கியை கழற்றி வைத்­து­விட்டு அரங்­குக்கு சுத்­த­மான கையு­டனும் ஒரு உண்­மை­யான நன்­நோக்­கு­டனும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வாருங்கள் என அழைக்கின்றேன்

Share This Post

Post Comment