Thursday, November 8th, 2018

 

அடுத்த நான்கு வருடங்களுக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

அடுத்த நான்கு வருடங்களுக்கு எப்படி வரி உயர்வை அதிகரிப்பது என்பது தொடர்பில் எட்மன்டன் நகர மேஜர் நேற்று (வியாழக்கிழமை) காலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். மேலும் இதன் போது அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சொத்து வரிகளை அதிகரிப்பது பற்றி நகரம் ஊழியர்கள் 700 பக்கங்கள் கொண்ட முன்மொழிவொன்றினை முன்வைத்துள்ளனர். முன்மொழியப்பட்ட அதிகரிப்பின் படி சராசரி வீட்டு உரிமையாளருக்கு, அடுத்த வருடத்தில் கூடுதல் 79 டொலர் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 இல் 72 டொலர் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 50 டொலர்கள் அதிகரிக்கப்படும் எனவும் அந்த முன்மொழிவினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 மாதத்திற்கான வரவு செலவுத் திட்ட பேச்சு மாதத்தின் இறுதியில் அரமபமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பது உறுதி – முதல்வர் டக் ஃபோர்ட்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளார். அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் நீண்ட நாட்கள் மௌனமாக இருந்த அவர் நேற்று (புதன்கிழமை) இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட முதல்வர், போதைப்பொருளில் இருந்து விடுபடும் சிகிச்சை காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று கிழக்கு ஒன்ராறியோ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய டக் ஃபோர்ட், ஜிம் வில்ஸன் அலுவலகம் குறித்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்த ஆரம்பத்தில் மறுத்துவிட்டதென கூறினார்.


பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல்

சத்தீஸ்காரில் முதல் கட்ட தேர்தல் வருகிற 12–ந் தேதி நடக்க இருக்கிறது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில் ஆகாஷ் நகர் பகுதியில் கண்ணி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டது. நக்சலைட்டுகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பஸ் சிக்கி உருக்குலைந்தது. இந்த கோர சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர், பஸ் டிரைவர் மற்றும் கன்டக்டர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள்Read More


3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வெடித்த வாலிபர்

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.


கனடாவில் ஆள்மாறாட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது

இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக கனடாவின் ஒன்றாரியோவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் இவர் ஆள்மாறாட்டம் செய்ததாக குறிப்பிடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். 47 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர், தனது சொந்த நிறுவனமொன்றிற்காக இராணுவ வீரரின் உடைகளை அணிந்து பொது மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை நிதி வசூலித்துள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்

மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் 44 வயதுடையவர் என்றும் அவர் வில் மற்றும் அம்பினாலேயே தாக்கப்பட்டுள்ளார் என்றும் பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.


கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ

கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக கனடாவுக்குள் புகலிடம் கோரி நுழைய முற்பட்ட வேளையில், கனடாஅவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. குறித்த சம்பவத்திற்காக தான் வருந்துவதாகவும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோருவதாகவும் நேற்று (புதன்கிழமை) கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், கனேடிய வரலாற்றில் அந்நாடு புரிந்த தவறுகள் அனைத்திற்கும் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த 1914ஆம் ஆண்டிலிருந்து கோமகதா மாரு குழுவினர், ஜப்பானியRead More


ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல் – 47 பேர் பலியான பரிதாபம்

ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேவில் இருந்து கிழக்கு நகரான ருசாபே நகரை இணைக்கும்  சாலையில், இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக  விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான சாலை பராமரிப்பு காரணமாக ஜிம்பாப்வே நாட்டில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலைRead More


கனடா வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை

கனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற குறித்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியில் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. மாலை 6.30 மணியளவில் முதலாவது வெடிப்புச் சம்பவம் பாதிவாகியதோடு, அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இரண்டாவது வெடிப்புச் சம்பவம் இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்Read More


ஆசியா பிபி வெளிநாடு சென்றதாக வெளியான செய்தி பொய்யானது – பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஆசியா பிபி என்ற கிறிஸ்தவப் பெண்ணுக்கு தெய்வ நிந்தனை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை லாகூர் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வு, அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானில் மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில் மால்டான் சிறையிலிருந்து ஆசியா பிபி விடுதலை செய்யப்பட்டார். ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியது. பாகிஸ்தான் மீடியாக்கள் அனைத்தும் இச்செய்தியை ஒளிபரப்பு செய்தனர். இப்போது இச்செய்தியை பாகிஸ்தான் அரசு போலியானதுRead More