Friday, October 26th, 2018

 

பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் – ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

ஒன்ராறியோவில் மாணவர்கள் அல்லது குழந்தைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தால் ஆசிரியர்களின் கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ கல்வி அமைச்சர் லிசா தொம்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கு நிலைகளை பேணும் வகையில் கல்வி அமைச்சர் லிசா தொம்சன் பாதுகாப்பான மற்றும் துணைபுரியும் சட்டத்தை தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த சட்டத்தை மீறி, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட  வறான நடத்தைகளில் ஈடுபட்டால், அவர்களின் கல்வி பதிவு செய்யும் சான்றிதழ் திரும்பப் பெறப்படும் எனவும் கூறினார்.


மிசிசாகுவா பகுதியில் இருவேறு துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு நாடுதழுவிய பிடியாணை

மிசிசாகுவா பகுதியில் இடம்பெற்ற அபாயகரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய 31 வயதுடைய நபருக்கு கனடா தழுவிய பகிரங்க பிடியாணையை பிறப்பித்துள்ளது. இம்மாதம் 2ஆம் திகதி கோவரே டிரைவில் உள்ள டவுன்ஹவுஸ் வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவசரமாக எட்டோபிகோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இரண்டாவது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 31 வயதுடைய ரிச்சர்ட் சேம்பர்ஸ் என்பவரை தேடி வந்த பீல் பிராந்திய பொலிஸார் தற்போது பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் இவர் ஏற்கனவே மிசிசாகுவா பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதியும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவரது அடையாளங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பொலிஸார், இவரை கண்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல்Read More


வரலாற்று சிறப்பு மிக்க சுவரில் கிறுக்கிய கனடா பெண் மன்னிப்பு கேட்டார்

தாய்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சுவரில் விசிறல் நிறப்பூச்சால் எழுதியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த இளம்பெண் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், அடுத்த கட்ட சட்டநடவடிக்கை குறித்து அச்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது நண்பர்களோடு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்னி ஷ்னெய்டர் (22) என்பவர், பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நண்பருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும்போது ஒரு விசிறல் நிறப்பூச்சு குடுவையொன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்துள்ளார். பிரிட்னியின் நண்பரான லீ, அங்கிருந்த ஒரு சுவரில் Scouser Lee என்று விசிறல் நிறப்பூச்சால் எழுதவே, பிரிட்னியும் அதற்கு கீழே B என்று ஸ்பிரே செய்துள்ளார். அவர்கள் ஸ்பிரே செய்த சுவர ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசால் பாதுகாக்கப்படும் ஒரு புராதன நினைவிடமாகும். அதை சேதப்படுத்துபவர்களுக்குRead More


யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் 44 வயதான டுவைன் மக்மிலன் என்பவர், கீல் ஸ்ட்ரீட் மற்றும் கனார்ட்டிக் டிரைவ் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவரை கைது செய்தனர். இதில் 19 வயதுடைய ஜானோயே கார்பென்டர் என்பவரும், 16 வயதுடையவரும் கைது செய்யப்பட்டு இரு கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தங்கம் வென்ற உலகின் முதல் திருநங்கை

பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் ஒன்றில் தங்கம் வென்ற திருநங்கைக்கு எதிராக பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Rachel McKinnon தத்துவவியலில் துணைப்பேராசிரியராக பணி புரிகிறார். திருநங்கையான அவர் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் சைக்கிள் பந்தயத்தில் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கம் வென்றார். ஒரு திருநங்கை விளையாட்டு வீரரின் உடலில் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஹார்மோன் இருந்தால் அவர் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். Rachel McKinnon இன் டெஸ்டோஸ்டீரான் அளவு, விதிகளுக்குட்பட்டிருந்ததால் அவர் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தங்கம் வென்றதும் பலர் அவர்மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். வெண்கலம்Read More


இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்பு

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை

மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவலின் படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 18 ஆயிரத்து 423 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 847 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரெயில்வே வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அமிதாப் பச்சன், பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல நடைமேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும், விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் 2 வயதில் முதன்Read More


பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்

எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமாகும். அன்றைய தினத்திற்குள் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் தீபாவளிக்கு முற்பணமாக 10000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வருகின்ற தீபாவளி பண்டிகை தினம் முதல் மக்களோடு மக்களாக நின்று எந்த வகையான போராட்டங்களையும் செய்ய தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.Read More


சபரிமலை விவகாரம்: கைது தொடரும் – டிஜிபி எச்சரிக்கை

சபரிமலை விவகாரத்தில் கைது தொடரும் என போலீஸ் டிஜிபி கூறி உள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 1,400 பேரை கைது செய்திருந்தனர். இது தொடர்பாக டிஜிபி லோக்நாத் பெஹரா கூறுகையில், இதுவரை 450 வழக்குகள் பதிவு செய்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். பலரை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது தொடரும். சட்டப்படி எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். பெண்களை பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து செல்வது குறித்து போலீஸ் குழுவிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். அரசிடமும் கேட்டுள்ளோம். தொடர்ந்து ஆலோசனை நடக்கிறது. இறுதி முடிவெடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இல்-து-பிரான்ஸிற்குள் அதிகரிக்கின்றதா வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை?

பிரான்ஸின் இல்-து-பிரான்ஸிற்குள் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிரபத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கயை A பிரிவில், 675,320 பேர் வேலை தேடிவருவதாக  குறிப்பிடப்படுகின்றது. இது கடந்த ஆண்டு இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டை விட 0.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த 0.4 வீத அதிகரிப்பானது இல்-து-பிரான்சுக்குள் மாத்திரம் எனவும், தேசிய அளவில் 0.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.