Monday, October 22nd, 2018

 

புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்

கனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து, நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நகரில் புகைப்பதற்கு என்று மேலும் 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு என ஹலிஃபெக்ஸ் நகரில், குறிப்பாக பேரூந்து தரிப்பிடங்கள் உட்படRead More


சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்டன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும். சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். துளசிRead More


கனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்

கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தபால் சேவைக்கான தொழில் பாதுகாப்பு, மேலதிக நேர வேலையை வலியுறுத்துவதை ஒழித்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை தபால் அலுவலகர்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


விஜய்யின் ‘ சர்கார்’ கதை கசிந்ததா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாசோ தனது கதை என்கிறார். இந்த நிலையில் சர்கார் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள கதை வருமாறு:- அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர். தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார்.Read More


குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்

அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்னை ஏற்படலாம். ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. Staphylococcus bacteria, Candida fungus ஆகியவை குழந்தைகளை பாதிக்கும். பெரும்பாலும் இந்த செயற்கைRead More


பெஜிடா அமைப்பிற்கு எதிராக ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம்

பெஜிடா அமைப்பிற்கு எதிராக ஜேர்மனியில் 10,000 இற்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை மேற்கொண்டுள்ளனர். புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரானதும் இடதுசாரிக்கொள்கைகளைக் கொண்ட அமைப்புமான பெஜிடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் அமைப்பின் நான்காவது வருடப்பூர்த்தியை கொண்டாடும் முகமாக, பாரிய பேரணியொன்றை ட்ரெஸ்டன் நகரில் மேற்கொண்டுள்ளது. குறித்த பெஜிடா பேரணிக்கு எதிராகவே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சார்பான பேரணியும் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெஜிடா அமைப்பிற்கு எதிரான பேரணி அமைதியாக மேற்கொள்ளப்படவேண்டுமென செக்சோனி மாநிலத்தின் ஆளுநர் மைக்கல் க்ரெட்ஸ்மெர் வலியுறுத்தியிருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு லுட்ஸ் பச்மன் என்பவரினால் இஸ்லாமியமயமாக்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய அமைப்பே பெஜிகோ ஆகும். நேற்று இடம்பெற்ற இரண்டு ஆர்ப்பாட்ட பேரணிகளும் மிகவும் அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதமான சம்பவங்களுமின்றி இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை

அரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபை ஒன்றுகூடும் தினம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. எவ்வாறாயினும் 19 ஆவது சீர் திருத்தத்தின் பிரகாரம் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரையில் தற்போதைய உறுப்பினர்கள் பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 27 ஆம் திகதி வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதுடன் அதற்கு முன்னர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒன்று கூட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 27 ஆம் திகதி மொங்கோலிய நோக்கி பயணிக்கRead More


ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது

சோவியத் ரஷியா அதிபராக இருந்த மிக்கேல் கார்பச்சேவுக்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுக்கும் இடையே 1987–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8–ந் தேதி ‘ஐ.என்.எப். ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிற நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது, அனைத்து விதமான அணு ஆயுதம் மற்றும் பிற குறுகிய தூர, நடுத்தர தூர ஏவுகணை சோதனைகளை தடை செய்கிறது. குறிப்பாக தரையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் இருந்து 5 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவு வரையில் செல்கிற ஏவுகணைகளை ஏவி சோதிப்பதை தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா மதித்து பின்பற்ற வில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார். அவர் நெவேடாவில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நடுத்தர தூரRead More


யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். அங்கு விவசாய பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு வழங்க வேண்டும் என படையினர் கோரியிருக்கின்ற போது அதற்கு எவ்வளவு நிதி வேண்டும் என ஆராய்ந்து அதனை அரசாங்கம் வழங்கRead More


ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து

இந்தியாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிரிவினை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த தினங்களில் வெளியான ரோ உளவு சேவை தொடர்பான செய்தியும் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி கொலை திட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபரிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பிலும் இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.