Monday, July 23rd, 2018

 

ரொறன்ரோ பகுதியை உலுக்கிய துப்பாக்கி சூடு – 3 பேர் உயிரிழப்பு

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் 29 வயது மதிக்கத்தக்க துப்பாக்கிதாரியை  சுட்டு கொன்றனர். மேலும் இதில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில்  உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


250 சிரியர்களை நாட்டுக்குள் வர மத்திய அரசு அனுமதி

சிரியாவில் தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்ட 250 பேரை நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ளவுள்வதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் படைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிரியாவின் தென்மேற்கு பிராந்தியங்களை கைப்பற்றியுளன. அதனைத் தொடர்ந்து அங்கு உதவிப் பணியாளர்களாக செயற்பட்டுவந்த வெள்ளைத் தொப்பித் தொண்டூழியர்கள் அவர்களின் குடும்பங்களுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்ட மிகவும் இரகசியமான நடவடிக்கை ஒன்றின் மூலமே இவர்கள் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரகசிய வெளியேற்ற நடவடிக்கையின் போது கனடா எந்தவித இராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்கவில்லை எனவும், அவர்களை சிரியாவில் இருந்து யோர்தானுக்குள் கொண்டுவருவதற்கான உதவிகளை மட்டுமே செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு நூற்றுக் கணக்கில் வெளியேற்றப்பட்டுள்ள சிரியத் தொண்டூழியர்களை கனடாவும், மேலும் இரண்டு மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன. இந்த நிலையிலேயேRead More


நரகாசூரன் படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் துருவங்கள் 16. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.


ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது – திரிஷா

தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி வருகிறார். சென்னைக்கு வந்து தங்கி இருக்கும் அவர் தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் மீது புகார் கூறி வருகிறார். சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீள்கிறது. நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் கேட்டால் அவர்களே இதுபற்றி சொல்வார்கள் என்று முன்னணி நடிகைகளையும் இதில் இழுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை லதா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஈரோடு சென்றார். அங்கு ஸ்ரீ ரெட்டி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை லதா கூறியதாவது:- “நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு.Read More


3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று (23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக சந்தர்பத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆகஸ்ட் 10 ஆம் திகதி விஜயகலா உரை நீதிமன்றத்திடம்

ஒன்ராறியோ இலங்கை ஓய்வு ஊதியம் பெறுவோர் சங்கத்தின் 8வது வருடாந்தப் பொதுக்கூட்டம் எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ள சபாநாயகரிடம் அனுமதி கோரி வேண்டுகொள் விடுத்துள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்கவிடம் குற்றத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 2018. ஜூலை 2 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. விஜயகலா எம்.பி.யின் உரை தொடர்பில் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்Read More


ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விஷேட குழு

மொரகஹகந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் அரியத்தருவதற்காக விஷேட குழு ஒன்று அடுத்த வாரம் முதல் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 21 ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பல் விழா மற்றும் ரஜரட்டையையும் மலைநாட்டையும் ஒன்றிணைக்கும் மொரகஹகந்த களுகங்கை சுரங்கக் கால்வாயின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஜப்பானில் வீசி வரும் அனல் காற்றுக்கு 44 பேர் பலி

ஜப்பான் நாட்டின் கிழக்கு ஆசியப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுக்கிறது. மேலும் அங்கு வீசி வரும் அனல் காற்று காரணமாக இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஜூலை 9-ஆம் தேதியிலிருந்து தற்போது வரை வெயிலுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த சனிக்கிழமை மட்டும் மத்திய டோக்கியோ பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்ததால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் முன்புபோல் எப்போதும் இல்லாத அளவிற்கு குமாகயா பகுதியில் 41 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். கொளுத்தி வரும் வெயில் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வுமையம் கூறுகையில், ”ஜப்பான் நாட்டில்Read More


சோமாலியாவில் ராணுவ தளம் மீது தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் – 27 வீரர்கள் பலி

சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது.  இந்த நிலையில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது தீவிரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். அதன்பின் உள்ளே நுழைந்துள்ளனர்.  இந்த தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றனர்.  இதனை அடுத்து அவர்கள் தளத்தினை தங்களது கட்டுக்குள் எடுத்து கொண்டுள்ளனர்.  இந்த தாக்குதலை அல் ஷபாப் அமைப்பு நடத்தியுள்ளது. கடந்த ஜூனில் ராணுவ தளம் மீது இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியாமுக்கு  7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சிறையில் உள்ள நவாஸ் செரீப் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை மருத்துவ குழுவினர்  தெரிவித்தனர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்Read More