Saturday, January 27th, 2018

 

வன்கூவர் ஐலன்டில் 3 பாடசாலைகள் மூடல் – 2 மாணவர்கள் திடீர் கைது

வன்கூவர் ஐலன்டில் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை காரணமாக வன்கூவர் ஐலன்டில் உள்ள மூன்று பாடசாலைகள் கடந்த வியாழக்கிழமை திறக்கப்படாது மூடிவைக்கப்பட்டு, பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பாடசாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த கனேடிய மத்திய காவல்துறையினர், இந்த அச்சுறுத்தலை விடுத்ததான குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளனர். மாணவர்கள் கைது செய்யப்பட்ட இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ள காவல்துறையினர், அச்சுறுத்தல் குறித்தோ, கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்தோ மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. அதேவேளை பாதுகாப்பையே மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுவதாக தெரிவித்துள்ள அவர்கள், இதனுடன் தொடர்புடைய அனைவரது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதனால், விசாரணைகளுக்கு போதிய நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


யாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் நகர சபைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்றிரவு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கில் மற்றும் மகேந்திரா ஜிப் வண்டி ஆகிய வாகனங்களில் வந்தவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என மூவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு துரத்தியதாகவும் இதனால் அனைவரும் வேறு வேறு திசைகள் நோக்கி ஓடிச் சென்றதாகவும் வேட்பாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் காரணமாக தான்Read More


டெல்லியில் கடும் பனிப்பொழிவு ரெயில் சேவை பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. பனிப்பொழிவு நிலவுவதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடும் பனிப்பொழிவால் 47 ரயில்கள் வருகை நேரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 14 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் ஜும்மா தொழுகைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இமாம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜமிதா என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் மக்களிடையே பெண்களுக்கு சம உரிமை இல்லாததை கண்டித்து குரல் எழுப்பியதால் சில பெரியவர்களின் எதிர்ப்புக்கு இலக்கானார். அவருக்கு தொடர்ந்து மிரட்டல்களும் வந்தன. இதனால், அங்கிருந்து வெளியேறிய ஜமிதா, வேறு பகுதியில் உறவினர்கள் வீட்டில் அடைக்கலம் அடைந்தார். இந்நிலையில், குரான் சுன்னத் என்ற அமைப்பின் ஆதரவுடன் மலப்புரம் மாவட்டத்தில் நேற்றையை (26-1-2017) ஜும்மா தொழுகையை ஜமிதா இமாம் ஆக இருந்து தலைமை தாங்கி நடத்தினார். தொழுகைக்கு முன்னர் ‘குத்பா’ என்னும் மார்க்கப் பேருரையும் ஆற்றினார். இந்தியாவிலேயே ஜும்மா தொழுகைக்கு ஒரு பெண் தலைமை தாங்கி நடத்துவது இதுவே முதல்முறை என கருதப்படும் நிலையில் இச்சம்பவத்துக்கு ஆதராகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாத ஜமிதா, ’ஆண்-பெண்Read More


UPFA உறுப்பினர்கள் என்னோடு இருந்தால் நாளை வேண்டுமானாலும் சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை உருவாக்குவேன்

மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களும் தன்னோடு கைகோர்த்து கொள்வார்களானால், நாளை வேண்டுமானாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க தான் தயார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.


கோடீஸ்வரர் மரணத்தில் பொலிசார் கண்டுபிடித்துள்ள புதிய தகவல்கள்

கனடாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் மரணத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் Toronto பகுதியைச் சேர்ந்தவர் Barry(75), 365 கோடி டொலருக்கு சொந்தக்காரரான இவருக்கு Honey Sherman(70) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பான விசாரணையை பொலிசார் தொடர்ந்து நடத்தி வந்த வேளையில், இது ஒரு கொலை என பொலிசார் தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவிக்கையில், இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தோம். அவர்கள் வீட்டை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போது, அதில் சில தடயங்கள் சிக்கின. அதை வைத்து விசாரணை நடத்தினோம், அதுமட்டுமின்றி அவர்களை ஆண்கள் பயன்படுத்தும் லெதர் பெல்ட்டை வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் Barry-யின் மொத்தRead More


இலங்கை அகதிகள் கச்சதீவு செல்ல தடை!

எதிர்வரும் 23,மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய-.இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ,மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து இன்று இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் பேபி, கடலோர காவல்படை, கடற்படை மத்திய உளவுத்துறை, கியூபிரிவு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்…… எதிர்வரும் 23,மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. காவல்துறையினரின்Read More


மன்னார் வளைகுடா கடலில் சிக்கியது யானை திருக்கை!

இன்று பாம்பனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது வளையில் ராட்சத திருக்கை மீன் ஒன்று சிக்கியது. ‘யானை திருக்கை’ என அழைக்கப்படும் இந்த திருக்கை மீன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் பாம்பன் கடல் பகுதியில் சிக்கியிருப்பது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 டன் எடை கொண்ட இந்த யானை திருக்கை மீனினை கருவாடு செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய்க்கு மீன் வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கினார். பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக்கு நீரினைப் பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்Read More


10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் குடியேற அனுமதி

அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு 3,10,000 பேர் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,30,000 பேரும், 2020ஆம் ஆண்டில் 3,40,000 பேரும் குடியேற்றப்படவுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிதானியா போன்ற நாடுகள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இறால் குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இறால் குடைமிளகாய் வைத்து சுவையான வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம். தேவையான பொருட்கள் : இறால் – 1 கிலோ பச்சை குடைமிளகாய் – 2 சிவப்பு குடைமிளகாய் – 1 வெங்காயம் – 4 பூண்டு – 6 பல் தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடிகனமான சட்டியில் ஒருRead More