Monday, March 20th, 2017

 

ஏப்ரல் 6ஆம் நாள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழமைக்குத் திரும்பும்: விஜய விதான

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் வழமைக்குத் திரும்புமென தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி ஏப்ரல் மாதம் 5ஆம் நாள் பூரணமாகப் பூர்த்தி செய்யப்படும். இதனையடுத்து ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் விமான சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும். இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மேலும் 3350 மீற்றர் நீளத்தையும், 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த ஓடுபாதை சர்வதேச, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைவாக சீரமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்திற்காக 7.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்போது மத்திய ஆசியாவின் 5ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது” என விஜய விதான மேலும்Read More


டெல்லியில் 7 நாட்களாக நடந்து வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

டெல்லியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தைRead More


தெற்கு சூடானில் விமானம் தரையிறங்கும் போது விபத்து

தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு ஜுபாவில் இருந்து வவு விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளது. இதனால் விமானத்தில் இருந்த 44 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஆனால் உள்ளூர் ரேடியோ ஒன்று, 9 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’ கடந்த 2013-ல் இருந்துதான் விமான போக்குவரத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


தப்பியோடிய 41 ஆயிரம் படையினரில் 1994 பேர் மட்டுமே கைது!

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 41 ஆயிரம் பேரில் ஆயிரத்து 994 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள். மேலும் சரணடையாமல் இருக்கும் படையினரில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். மூன்று இராணுவ அதிகாரிகள் உட்பட 1570 இராணுவத்தினரும், 393 கடற்படையினரும், 31 விமானப்படையினரும் தேடுதல்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற கனேடியர்

சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதை கடாவைச் சேர்ந்த ஆசிரியரான மாகீ மக்டோனெல் பெற்றுக்கொண்டுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருதுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் கனடா, பாக்கிஸ்தான், பிரித்தானியா, ஸ்பெய்ன், யேர்மனி, சீனா, கென்யா, அவுஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர். டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தேர்ததெடுக்கப்பட்ட குறித்த பத்துப்போகளில் வெற்றியாளராக கனடாவின் மாகீ மக்டோனெல் அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயரை அனைத்துலக விண்வெளி மையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டின் விண்வெளி வீரரான தோமஸ் பாஸ்குவட் என்பவர், நேரடி காணொளி வாயிலாக அறிவித்தமை நிகழ்வின் சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. இதேவேளை சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதை வென்ற ஆசிரியை மாகீRead More


நாளை அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்காத வகையில் திருத்தப்பட்ட உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இலங்கையிடம் இந்தியா தமது கரிசனையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர் கைது

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு 1750 பேரை கடத்திய குற்றத்திற்காக, அமெரிக்க மத்திய புலனாய்வு பணியக (FBI) அதிகாரிகளினால்  இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமான கொண்ட 51 வயதுடைய கனேடிய பிரஜையான ஸ்ரீகஜமுகன் செல்லையா எனப்படும் குறித்த சந்தேகநபர், அமெரிக்க Natchez  பகுதியில் உள்ள Adams County  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஹெய்டி, பஹாமாஸ் மற்றும் தெற்கு புளோரிடாவுக்கு வான் மற்றும் கடல் மூலம் குடியேற்றப்படும் நபர்களை கடத்தும் போது, ஒருவருக்கு தலா 55 ஆயிரம் அமெரிக்க டொலர் இலாபத்தை பெறுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீகஜமுகன் செல்லையா மறுப்பு தெரிவித்துள்ளதோடு, தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அல்பேர்ட்டா முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவராக ஜேசன் கென்னி

அல்பேர்ட்டா முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவராக முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்கரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைமைத்துவத் தேர்வுக்கான வாக்கெடுப்பில் மொத்தமாக அளிக்கப்பட்ட 1,476 வாக்குகளில், 1,113 வாக்குகளைப் பெற்று அமோக ஆதரவுடன் ஜேசன் கென்னி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தலைமைத்துவப் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்ட நிலையில்,  ஏனைய போட்டியாளரான சட்டமன்ற உறுப்பினர் ரிச்சேர்ட் ஸ்டார்கீ 323 வாக்குகளையும், பெரோன் நெல்சன் 40 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கட்சியின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இணைந்து இயங்குவதாக போட்டியிட்டு தோல்வி அடைந்த குறித்த இரண்டு போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர். கடந்த நான்கு தசாப்த காலமாக அல்பேர்ட்டா மாநிலத்தில் முற்போக்கு பழமைவாதக் கட்சியே ஆட்சியில் இருந்து வந்த நிலையில், கடந்தRead More


சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு நட்டஈடு

சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கனேடியர்களுக்கு, மத்திய அரசாங்கம் நட்டஈடு வழங்கவுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக மூன்று கனேடியர்கள் சிரியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், Abdullah Almalki, Ahmad El Maati மற்றும் Muayyed Nureddin ஆகிய கனேடியர்களிடம் மத்திய அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வெளிநாட்டு முகவர்களுடன் முக்கிய தகவல்களை பரிமாறிக்கொண்ட குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது கனேடிய புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கனேடியர்கள் நீண்ட காலமாக தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கோரி சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


சீன பாதுகாப்பு அமைச்சர் மைத்திரியை சந்தித்தார்!

சிறீலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேங்க் வங்க்குவாங், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கு சீனாவுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஆட்சியாளர், சிறீலங்காவின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நீண்டகாலமாக சிறீலங்கா பாதுகாப்பு படையினருக்கு வழங்கி பயிற்சிகளுக்கும் ஆட்சியாளர் மைத்தி நன்றி கூறியுள்ளார். இந்த பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு காரணமாக பல உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கைளால் நாட்டின் அபிமானத்திற்கும், சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ஆட்சியாளர் மைத்தி சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு கருத்து வெளியிட்ட சீன பாதுகாப்பு அமைச்சர், தற்போதையRead More