Saturday, April 9th, 2016

 

“ராஜீவ் கொலை” அரசியல்

“விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப்பெரிய தவறு ராஜீவ் காந்தியைக் கொன்றதுதான்”  என பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக எரிக்சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். செய்தவை எல்லாமே சரி என்று ஒரு அமைப்போ ஒரு நாடோ ஒரு தலைவரோ உலகத்தில் இருந்ததும் கிடையாது. இருப்பது சாத்தியமும் இல்லை. இதில் விடுதலைப்புலிகள் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடமுடியாது. ஆனால் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்று தொடர்ந்து பேசுவது ஒன்றும் தற்செயலாக நடப்பது அல்ல. ஒரு வேளை விடுதலைப்புலிகளே ஏற்றுக்கொண்டாலும் கூட உண்மையில் ராஜீவ் கொலை விடுதலைப்புலிகள் செய்த தவறு என்ற அடிப்படையில் பார்ப்பது பொருத்தமானது அல்ல. காரணம் 1919 ஏப்ரல் 13 அன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் (Amritsar) நகரில் உள்ள யாலியன்வாலா பாக் (Jallianwala Bagh)   என்ற மைதானத்தில் கூட்டம் நடத்திய பொதுசனம்மீது பிரித்தானியாவின் பஞ்சாப் கவர்னர் டயரின் (General R.E.H.Read More


உனக்கென்ன வேண்டும் சொல்லு?

அவரின் பின்புறமிருந்து இரண்டு கைகள் களுத்தை நெரிக்கிறது. அவரின் கன்னத்தை ஒரு முத்தம் ஈரம் செய்கிறது. அவரின் தோள்பட்டை, காதுமடல்கள் எல்லாவற்றையும் ஒரு மூச்சுக்காற்று மெல்லிதாய் சூடேற்றுகிறது. வேலைப்பளு, பொருளாதாரச்சுமை, இன்னும் சில காரணிகள் அவரை வாழ்க்கையின் விரக்தி நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. இது நாள்வரை நிமிர்ந்து நடந்த மனிதர் ஒருவர் இன்று மிகுந்த மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறார். விபரீதமான முடிவெடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்த அவரின் மூளை இப்போது இயங்குகின்றதா? இல்லையா? என்று தெரியாத நிலையில் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார். கழுத்தை இறுக்கிய கைகளும், தோளிலும் காதுமடல்களிலும் பரவிய மூச்சுக்காற்றும், முத்தமும், ஒன்றாய் இரண்டாய் உடைந்துவிழும் வார்த்தைகளும், அவர் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உணர்த்துகிறது. எல்லாமே அர்த்தமற்றதாக தெரிந்த அந்த இறுக்கமான தருணத்தை தகர்த்துப் போடுகிறது அந்தக்கைகளின் செயலும், மூச்சுக்காற்றின் வெப்பமும், முத்தத்தின் ஈரமும், மெல்ல உடைந்து விழும்Read More


மஹிந்த தோல்வியைத் தழுவி வீடு சென்ற போது குண்டு துளைக்காத வாகனத்தையும் எடுத்துச் சென்றார் – ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவி வீடு சென்ற போது குண்டு துளைக்காத வாகனத்தையும் எடுத்துச் சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வீடு செல்வதற்காக ஹெலிகொப்டர், பாதுகாப்பிற்கு விரும்பிய இராணுவ அதிகாரிகள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் போன்றவற்றை மஹிந்த எடுத்துச் சென்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தோல்வியடைந்து சென்ற எந்தவொரு அரச தலைவரும் உலகில் இருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மொனராகல் பிபிலே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மின்சார நாற்காலி பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும், தாம்Read More


தேசிய நல்லிணக்க முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது – அகாசீ

தேசிய நல்லிணக்க முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசீ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் தேசிய நல்லி;ணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜப்பான் விஜயம் செய்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புக்கள் குறித்து பிரதி அமைச்சர் அகாசீக்கு தெளிவுபடுத்தியுள்ளார். நல்லிணக்க முயற்சிகளுக்கு முழு அளவில் ஜப்பான் ஆதரவளிக்கும் என அகாசீ தெரிவித்துள்ளார்.


இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு கிடையாது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்காகவோ, அவருக்கான இராணுவப் பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். பனாகொடவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இலகு காலாட்படைத் தலைமையகத்தில், நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு, இராணுவத்தினருக்குப் பதி்லாக நன்கு பயிற்சி பெற்ற காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபருக்கோ, பிரதமருக்கோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் எனக்கோ இராணுவத்தினரின் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. முப்படையினர் முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்க வேண்டியதில்லை. அவர்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரை நீக்குவதற்கு பாதுகாப்புச் சபையில் தான் தீர்மானிக்கப்பட்டது. இனி எந்த அரசியல்வாதிக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது. முன்னைய ஆட்சியாளர்களின் பிள்ளைகள், ஒழுங்குRead More


இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை. இது ராஜபக்சாக்களின் கோட்டையாக விளங்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கதிர்காமம் என்னும் இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2012 பெப்ரவரி 01 அன்று ‘ஐலண்ட்’ பத்திரிகையில் பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: ‘பாதயாத்திரிகர்கள் தங்குமிடத்தில் பழைய தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமத்திலுள்ள பாதயாத்திரிகர்கள் தங்குமிடம் ஒன்றைத் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கடந்த செவ்வாயன்று சலவை இயந்திரத்திலிருந்து தற்கொலை அங்கி ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக உள்ளுர் காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் அணியினரால் தற்கொலை அங்கி அங்கிருந்து அகற்றப்பட்டு அதிலிருந்த வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. இச்சலவை இயந்திரமானதுRead More


மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

வடக்குக் கிழக்கு மக்களை அச்சுறுத்தும் மூன்று பிரச்சனைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்துத் தரிப்பிடத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் ஒழுங்குபடுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இரும்பினால் பொருத்தப்படும் அறுபத்தையாயிரம் வீட்டினை நிறுத்தி கல்வீட்டுத் திட்டம் வழங்கவேண்டுமெனவும், சம்பூர் அனல் மின் நிலையத்தை நிறுத்தி மின்சாரம் பெறுவதற்கு மாற்று வழியொன்றினைத் தெரிவுசெய்யவேண்டுமெனவும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு ஒயிலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டுமெனவும் அதற்குரிய நிவாரணமும் வழங்கப்படவேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், இதன்போது சம்பந்தன் ஐயாவே சம்பூருக்கு என்ன தீர்வு? மாவை ஐயாவே சுன்னாகத்திற்கு தீர்வு என்ன? பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம்; பொருத்தமான கல்வீடுகளே எமக்குத் தேவை. பாதிக்கப்பட்டோரை ஏமாற்றாதே? தாமதமின்றி தரமான வீடுகளைக் கொடு; மாசடைந்த நீருக்கு மத்திய அரசே தீர்வென்ன? போன்ற கோஷங்களைRead More


எங்களுடைய பலம் ஒற்றுமையிலேயே உள்ளது – சம்பந்தன்

செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணை திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொரடந்து உரையாற்றுகையில், நாங்கள் தற்பொழுது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21பேரடங்கிய வழிநடத்துக் குழு நிர்ணயிக்கப்பட்டு அதனுடைய முதல் அமர்வு இடம் பெற்று இம் மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது.Read More


ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில், நடைபெறும் ஆசிய முதலீட்டுக் கருத்தரங்கில் பேசிய அவர், அனைத்துலக நாணய நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக சிறிலங்காவில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. சீனாவில் இருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியது பேச்சுக்கள் நடத்தப்பட்டு இறுதியான முடிவு எடுக்கப்படும். இந்தப் பேச்சுக்கள் வரும் திங்கட்கிழமை நிறைவடையும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பசும்பொன் வீடுகள் மக்களிடம் கையளிப்பு

இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி நிவித்திகல – தொலஸ்வெல தோட்ட கொலம்பகம 2ம் பிரிவு பகுதியில் பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 09.04.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிவித்திகல – தொலஸ்வெல தோட்ட கொலம்பகம 2ம் பிரிவில் 30 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.