Monday, March 14th, 2016

 

14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!

பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வயது 14 வருடம் 4 மாதம். எதிரியாகிய முதியவருக்கு 63 வயது. இந்த வன்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பெண் குழநதை ஒன்று பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் முதியவர், மாணவி, மாணவிக்குப் பிறந்த குழந்தை ஆகிய மூவரினதும் இரத்தத்தில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மரபணு பரிசோதனை நடத்திய ஜீன் டெக் விஞ்ஞான ஆய்வுகூடத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி குடாRead More


கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் மெழுகுவர்த்தியின் துணையுடன் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்றிரவு நாடுமுழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தவேளை மெழுகுவர்த்தியின் துணையுடன் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். எதிர்வரும் 17 ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய பேரணியை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


போர் விதிமுறைகளுக்கு முரணாக பிரபாகரன் கொல்லப்பட்டாரா?- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா என்பது, விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். “போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே அனைத்துலக தரப்பினர் அவதானித்து வரும் நிலையில், இப்போது அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்துகள் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், வெள்ளைக்கொடி விவாகரத்திலும் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியுள்ளார். அவ்வாறான தேவை இப்போது அரசாங்கத்திற்கு இல்லை. நாம் உள்ளக விசாரணைகள் மூலமாக இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.அதேபோல உள்ளகப் பொறிமுறைகள் சரியாக நடைபெறும். போரின் இறுதித் தருணங்கள் தொடர்பாக அரசாங்கம் தீவிரமானRead More


எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி!

போர் விதிமுறைகளுக்கு முரணாகப் போரிட்டதாக, குற்றம்சாட்டி எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. “என்னை பழிவாங்கவும், எனது குடும்பத்தை தண்டிக்கவும் தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. செய்யாத குற்றங்களுக்காக நாம் தண்டனை அனுபவித்து வருகிறோம். எனது புதல்வர் யோசித செய்யாத குற்றத்துக்காக சிறையில் உள்ளார். ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பாக மற்றைய புதல்வர் நாமல் ராஜபக்சவை கைதுசெய்ய அரசாங்கம் திட்டம் தீட்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். நாம் எவ்வாறு போரை முன்னெடுத்தோம், அதற்கான செலவுகள் என்ற அனைத்தும் சரத் பொன்சேகாவுக்கு நன்றாகவே தெரியும். அவர் அப்போதைய இராணுவத் தளபதி என்ற வகையில் எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். அதை நான் மறைக்காமல் கூறவேண்டும். ஆனால் அதையும் தாண்டிRead More


அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டிக்கவே அரசு முயற்சி! – அருட்தந்தை சக்திவேல்

அரசியலுக்காக தமிழ் அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு நீண்டகாலம் தண்டனை அனுபவித்து வருவதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். உண்ணாவிரதம் இருந்தால்தான் தமது விடுதலை விடயத்தில் முன்னேற்றமொன்றைக் காணமுடியும் என்ற நிலைக்கு அரசியல் கைதிகள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 14 தமிழ் அரசியல் கைதிக‍ள் 15 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிட்டனர். கடந்த காலத்திலும் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டபோதே பிணை வழங்குவது, புனர்வாழ்வு வழங்குவது என்ற உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. உண்ணாவிரதம் இருந்தாலே கைதிகளின் விடயத்தில் முன்னேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அரசாங்கம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். உண்ணாவிரதம் மேற்கொண்டதாலேயே அவசர அவசரமாக 14Read More


புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் துபாயில் முதலீடு ! விசாரணை ஆணைக்குழு விரைகிறது

விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் தங்கத்தை தேடி பாரிய நிதி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் துபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முதலீட்டை செய்தவர்கள் தொடர்பில் ஆராய இக் குழுவினர் செல்லவுள்ளனர். யுத்த காலத்தில் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட வங்கிகளில் வடக்கு மக்களில் பெருமளவான தங்கம் அடகு வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பெருமளவானவை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. புலிகளிடமிருந்து சுமார் 150 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் பிரதமர் ரணில் நாடாளுமன்றில் தெரிவித்ததோடு, அவற்றில் 30 கிலோகிராம் தங்கம் மீள கையளிக்கப்பட்டதாகவும், 80 கிலோகிராம் இராணுவத்தினரிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். எஞ்சிய தங்கம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் நாடாளுமன்றில் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டRead More


அனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார். மின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது தடவையாக நேற்று நாடு முழுவதிலும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையை அடுத்து இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடு முழுவதற்குமான மின்சார விநியோகம் தடைப்பட்டது. சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக இது நீடித்தது. யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்றிரவு 10.30 மணி வரை மின்சாரத் தடை நீடித்தது. பிரதான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறினை அடுத்தே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டது. இது சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே சிறிலங்காRead More


சென்னையின் புதியவாய்ப்பும் தள்ளாடப்போகும் கொழும்புத் துறைமுகமும்!

கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் சேவை சென்னையில் ஆரம்பமாகியுள்ளதால், கொழும்புத் துறைமுகம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கும் நிலை தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலூடாகப் பயணம் செய்த கப்பல் இதுவரை கொழும்புத்துறைமுகத்தில் அல்லது சிங்கப்பூர் துறைமுகத்திலேயே எரிபொருளை நிரப்பி வந்தன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா சென்னைத் துறைமுகத்தில் தனது எரிபொருள் நிரப்பும் சேவையை ஆரம்பித்துள்ளது. சென்னைத் துறைமுகத்திலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் மிதவைப் படகுகள் மூலம் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா புதிய வாய்ப்புக்களை உருவாக்கியதுடன், சர்வதேச கடற்போக்குவரத்துப் பாதையிலேயே (சென்னைத் துறைமுகத்துக்குள் செல்லாமல்) தமக்குரிய எண்ணெய் நிரப்பும் வசதியைப் பெற்றுக்கொள்வதால் கப்பல்களுக்கான செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்துக்குள் நுழைய செலுத்தவேண்டிய கட்டணங்கள், தரித்து நிற்பதற்கான கட்டணங்கள் போன்ற கட்ணங்கள் ஒன்றுமே கட்டாமல் எரிபொருளை நிரப்பக்கூடியதாகவும், நேரத்தை மிச்சப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.Read More


மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! காரணம் தெரியுமா?

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க இரண்டு நாட்கள் வரை தேவைப்படும் எனவும், இதனால் இலங்கையின் மின் கட்டமைப்புக்கு 700 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் எனவும், மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சி.விக்ரமசேகர தெரிவித்துள்ளார். இதனால் அடிக்கடி நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


“அம்மா” நடன பார்வையில் – நிஜத்தடன் நிலவன்

சர்வதேச பெண்கள் தினத்திற்தை முன்னிறுத்தி ஆஸி சிட்னி நகரில் ‘’சமர்ப்பனா’’ நுன்கலை நடன பள்ளி இயக்குனர்கள் திரு திருமதி சிதம்பரம் R. சுரேஸ், சோபனா சுரேஸ் ஆகியோர் தயாரித்து வழங்கிய அம்மா நடன நிகழ்வு 12-03-2016 மாலை 6.30 மணிக்கு கசூலா பவர்கவுஸ் ஆர்ட்ஸ் சென்ரர் நடைபெற்றது. திருமதி.கலைமாமணி உமாகாந் மற்றும் புகழ்பெற்ற நடனக்கலைஞர், பத்மபூஷ்ணம் சி.வி சந்திரசேகர் ஐயாவின் மாணவன் சிதம்பரம் R. சுரேஸ் நடனநெறியாள்கை செய்து தனது அனுபவங்கள், கற்றவைகள் யதார்த்தங்கள் நிறைந்த நிறைகோள் வெளிப்பாட்டினை அம்மா என்னும் தொனிப்பொருள் கொண்டு நடனத்தின் ஊடாக பகிர்ந்து கொண்டமை பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்றுக் கொண்டது. நாட்டியம் மனிதனின் உணர்வுகளை, அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்படுத்தி கிறிஸ்துவிற்கு முன்பு இந்தியாவில் தோற்றம் பெற்ற நாட்டியக்கலைகள் அழகியலையும் ஆன்மீகத்தையும் இணைத்துRead More