2009இற்கு பின்­ன­ரான தமிழ் மென்­சக்தி

ekuruvi-aiya8-X3

மன்னார் மாவட்­டத்­திற்கு ஏதோவொரு முக்­கி­யத்­துவம் இருக்­கின்­றது என்­பதை முதலில் கூறி­யா­க­வேண்டும். முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குசெய்­யப்­பட்ட இவ்­வா­றா­னதொரு சந்­திப்பு முன்பும் இம்­மண்ணில் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. பெரு­ம­ளவில் கட்­சிப்­பி­ர­தி­நி­திகள் சந்­தித்­துக்­கொண்ட ஒரு சந்­திப்­பாக­ அது­வி­ருந்­தது. அந்த சந்­திப்பின் நிறைவில் தமிழ்த் ­தே­சியப் பேர­வை­யொன்றை உரு­வாக்­கு­வ­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் அப்­ப­டி­யொன்று நட­க்­க­வில்லை. தற்­போது அந்த சந்­திப்பின் விரிந்த வடி­வ­மொன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. 2009இற்குப் பின்னர் தமிழ்த் தேசியப் பரப்பில் இவ்­வா­றா­ன­தொரு சந்­திப்பு முதற்­த­ட­வை­யாக நடை­பெறு­கின்­றது.

தமிழ்த் ­தே­சி­யத்தின் ஜன­நா­யக உள்­ள­டக்­கத்தை பலப்­ப­டுத்தும் ஒரு சந்­திப்­பா­க­வுள்­ளது. ஈழத் ­த­மிழ்ப்­ப­ரப்பில் மென் சக்தி பற்­றிய உரை­யாடல் என்­பது பலத்­தின்­பாற்­பட்­டதா? பல­வீ­னத்தின் பாற்­பட்­டதா? என்­றொரு கேள்­வி முத­லா­வ­தாக கேட்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வன்­சக்தி வெற்­றி­டத்­தி­லி­ருந்து தான் மென்­சக்தி பற்றி உரை­யா­டு­கின்றோம். மென்­சக்தி பற்றி என்­னு­டைய விளக்­கத்தை மூன்று கட்­டங்­க­ளாகப் பிரிக்­கப்­போ­கின்றேன்.

மென்­சக்தி பற்றி உலக அனு­பவம்

ஜோசப் நை எனப்­படும் அமெ­ரிக்க அர­சாய்­வி­ய­லாளர் மென்­சக்தி என்ற வார்த்­தையை கோர்க்­கின்றார். அமெ­ரிக்கா கெடு­பி­டிப்­போரின் இறு­தியில் உலகின் ஏக­போ­க­ வல்­ல­ர­சாக எழுச்சிபெற்­றி­ருந்த பின்­னணி. அத்­த­கைய காலப்­ப­கு­தியில் அர­ச­றி­வியல் பத­மாக மென்­சக்திப் பிர­யோ­கத்­திற்கு வரு­கின்­றது. ஆனால் பிந்­திய தசாப்­தங்­களில், குறிப்­பாக செப்டெம்பர் 11 தாக்­கு­த­லுக்குப் பின்னர் அமெ­ரிக்க மற்றும் மேற்­கத்­தேய நாடுகளின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யின் பொது இரா­ஜதந்­தி­ர­த்து­றையில் அதிகம் பிர­யோ­கிக்­கப்­படும் ஒரு வார்த்­தை­யா­கவும் நடை­மு­றை­யா­கவும் இது மாறி­விட்­டது.

DSC02069-Lபடைத்­துறை, பொரு­ளா­தாரம் இரண்டும் வன்­சக்தி. இரண்டின் மூலமும் நாம் எதை­யா­வது செய்­யப்­போ­கின்றோம் என்றால் பலப்­பி­ர­யோகம் செய்­கின்றோம். பலப்­பி­ர­யோ­கத்தின் மூலம் ஒன்றை நாம் பெறு­கின்றோம் என்றால் அது வன்­சக்தி. பலப்­பி­ர­யோகம் செய்­யாது எதை­யா­வது பெறு­கின்றோம் என்றால் அது மென்­சக்தி. எங்­களைப் பற்றி மற்­ற­வர்கள் என்ன நினைக்­கின்­றார்கள் என்­பதில் இருந்து மென்­சக்தி உரு­வா­கின்­றது. மற்­ற­வர்கள் எம்­மீது கொண்­டி­ருக்கும் ஈர்ப்பு சக்தி. எமக்­கி­ருக்கும் வசிய சக்தி. அது பலப்­பி­ர­யோ­கத்தால் வரு­வ­தல்ல. பலம் பிர­யோ­கித்து அதனைப் பெற­மு­டி­யாது என்று அமெ­ரிக்க அர­சாய்­வி­ய­லாளர் ஜோசப் கூறு­கின்றார்.

உதா­ர­ண­மாக, வத்­திக்­கானை கூறலாம். ஒரு­முறை சோவியத் தலைவர் ஸ்டாலின், வத்­தி­க்கா­னிடம் எத்­தனை படை­ய­ணிகள் உண்டு எனக் கேட்டார். வத்­திக்­கா­னிடம் படை­ய­ணிகள் கிடை­யாது. உலகில் மிகச்­சி­றிய அரசு. உலகில் மிகப்­பெ­ரிய மென்­சக்­தி­களில் அது­வொன்று. படை­ய­ணி­களை வைத்­தி­ருக்­கா­ம­லேயே உல­கத்தை தன்னை நோக்கி ஈர்த்து வைத்­தி­ருக்­கின்­றது. எப்­படி? புனி­தர்­களின் சிலு­வைப்­பா­டுகள் ஊடாக அந்த ஈர்ப்பு சக்­தியை தன்னை நோக்கிக் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்­ளது. தனக்கு சரி­யெனப்பட்ட ஒன்­றுக்­காக சிலு­வையில் அறை­யப்­ப­டவும் இரத்தம் சிந்­தவும் புனி­தர்­களின் நூற்­றாண்­டு­கால வியா­பத்­துக்­கூ­டா­கவும் கட்­டி­யெ­ழுப்பப்­பட்­ட­துதான் வத்­தி­கானின் மென்­சக்திக் கவர்ச்சி.

அமெ­ரிக்­காவை ஏக­போ­க­வல்­ல­ரசு எனக் கூறு­கின்றோம். ஆனால், வியட்­நாமில் வெல்ல­மு­டி­ய­வில்லை. நாம் உலகின் ஏக­போக வல்­ல­ர­சாக வந்­த­பின்னர் தான் அல்­குவைதா செப்­டெம்பர் 11 தாக்­கு­தலை மேற்கொண்டது என ஜோசப் நை விளிக்கின்றார். வன்­சக்­தியால் தன்னை பாது­காக்க முடி­ய­வில்லை என்­பதைத் தான் இது காட்­டு­கின்­றது என்­பதை தான் ஜோசப் நை சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

அமெ­ரிக்கா உலகின் மிகப்­பெ­ரிய வல்­ல­ர­சாக வந்த பின்­னரும் கூட தன் எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து தன்னைப் பாது­காக்க முடி­யா­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­காவின் எதிரி எங்­கோ­வொரு தொலை­தூர அர­புக்­ கி­ரா­மத்தில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்றான். எங்­கோ­வொரு குகைக்குள் இருந்து வெடி­குண்டை சுமந்து கொண்டு அமெ­ரிக்­காவை நோக்கி வரு­கின்றான். அவனை எவ்­வாறு தடுப்­பது என்று ஜோசப் நை கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றார். எமது பாது­காப்புக் கட்­ட­மைப்பு அதனை தடுக்க­மு­டி­யாது இருக்­கின்­றது. ஆகவே எமது வன்­சக்­தியின் இய­லா­மையை ஒத்­துக்­கொள்­கின்றோம் என்­கிறார் ஜோசப் நை.

வன்­சக்­தியின் போதா­மையை உணர்ந்து கொண்டு தன்னைப் பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கி­யது தான் மென்­சக்தி. வன்­சக்­தியின் ஓட்­டை­க­ளுக்­குள்ளால் எம்மை தாக்­கு­வ­தற்கு எதி­ரிகள் வந்துவிடு­வார்கள். அதனை தடுப்­ப­தற்­காக நாம் நண்­பர்­க­ளான ஒரு பாசத்தை உரு­வாக்­குவோம். அந்த நண்­பர்கள் அமெ­ரிக்­காவை தாக்கக் கூடாது. அது­வொரு ஜன­நா­ய­கத்தின் இதயம். ஹொலி­வூட்டின் மையம். அங்­கி­ருந்­துதான் நாம் ரசிக்கும் கலை வரு­கின்­றது. எமது பிள்­ளைகள் அங்கே கற்­கின்­றார்கள் எனக் கூறும் நண்­பர்­களை உற்­பத்தி செய்வோம். எங்கள் மீது ஈர்ப்­புக்­கொண்ட, நாம் வசீ­க­ரிக்க வல்­ல­வொரு உல­கத்தை உரு­வாக்­குவோம். அதன் மூலம் எமது மென்­சக்­தியை அதி­க­ரிக்­கலாம். அதன் மூலமே வன்­சக்தியால் பாது­காக்க முடி­யாத ஓட்­டை­களை அடைக்க முடியும் என ஜோசப் நை கூறினார்.

அது செப்டெம்பர் 11 இரட்­டைக்­கோ­புரத் தாக்­கு­த­லுக்குப் பின் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பு­டை­ய­தொரு கோட்­பா­டாக அது மாறி­யது. இன்னும் சிறப்­பாகச் சொன்னால், சிவப்பு ஆபத்தை எதிர்­கொண்ட அமெ­ரிக்கா ஏக­போக வல்­ல­ர­சாக இருந்­த­போது பச்சை ஆபத்து வந்­தது. அதுதான் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம். சிவப்பு ஆபத்து அதி­க­பட்சம் அர­சு­க­ளி­ட­மி­ருந்துதான் வந்­தது. பச்சை ஆபத்து அர­சற்ற தரப்­பு­க­ளி­ட­மி­ருந்து வந்­தது. அதனை அரசின் பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­குள்ளால் மட்டும் கையாள முடி­ய­வில்லை. எனவே தான் அமெ­ரிக்­கர்கள் மென்­சக்தி பற்றி சிந்­திக்­கத்­தொ­டங்­கி­னார்கள். ஆகவே மென்­சக்தி என்ற வாதம் அமெ­ரிக்­கா­வி­லேயே ஒரு பல­வீ­னத்தின் வெளிப்­பாடு தான்.

வன்­சக்­தியின் போதா­மை­யி­லி­ருந்­துதான் மென்­சக்தி பற்றி சிந்­திக்கத் தொடங்­கி­னார்கள். உதா­ர­ண­மாக, ஆப்கான் தலி­பான்­க­ளி­டமி­ருந்து மீட்­கப்­பட்­டதன் பின்னர் இந்­திய அமைச்சர் ஆப்­கா­னுக்குச் சென்றார். அவர் பொலிவூட் சினிமா இறு­வட்­டு­க்க­ளையே கொண்டு சென்றார்.

nillanthanஹொலி­வூட்டில் என்ன உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றதோ அது உலகம் முழு­வ­திலும் எங்கள் மீதான அபிப்­பி­ரா­யத்தைத் தீர்­மா­னிப்­ப­தாக உள்­ளது எனக் கூறும் ஜோசப் நை, ஒரு மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்பும் அடிப்­படை மூலக்­கூ­றுகள் என மூன்று பிர­தான விட­யங்­களை அடை­யாளம் காண்­கிறார். சமூகத்தின் பண்­பாட்டுச் செழிப்பு, சமூகத்தின் அர­சியல் நாக­ரிகச் செழிப்பு, கலை, இலக்­கிய சமூக ெவளிப்­பாடு ஆகிய மூன்­றுமே அவை­யாகும்.

எனவே நாம் இந்த விளக்­கத்தின் பின்­ன­ணியை வைத்துப்­பார்ப்­போ­மா­க ­வி­ருந்தால் அமெ­ரிக்­கர்­களின் நோக்கு நிலையில் மென்­சக்தி எனப்­ப­டு­வது வன்­சக்­தி­களின் போதா­மை­களின் விளைவே. தங்­க­ளது மென்­சக்­தியை உலகம் முழு­வதும் பரப்­பு­வதன் மூலம் தமது விருப்­பத்­திற்­கேற்ப உல­கத்தை வடி­வ­மைக்­கலாம் என அமெ­ரிக்­கர்கள் நம்­பு­கின்­றார்கள். இருப்­பினும் ஜோசப் நை அத­னையும் கேள்­வி­க்குட்படுத்து­கின்றார். ஒரு ஹொலிவூட் திரைப்­ப­டத்தைப் பார்க்கும் கீழைத்­தே­யர் அமெ­ரிக்­காவின் ஜன­நா­யகச் செழிப்பை இர­சிப்­பாரா? அல்­லது தன் இலட்­சி­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­பின்றி இருப்­பாரா?

இதற்கு எங்­க­ளி­டத்­தி­லேயே உதா­ரணம் உண்டு. நாலாம் கட்ட ஈழப்­போ­ரின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் ஒரு ஹொலிவூட் படத்தை ஏறக்­கு­றைய ஆறு தட­வை­க­ளுக்குக் குறை­யாமல் பார்த்­த­தாகக் கூறு­கின்­றார்கள். ‘திறி கண்ரட்’ எனப்­ப­டு­கின்ற ஹொலிவூட் படமே அது­வாகும். மன்னன் லியோ­வைப்­பற்­றி­யது. சர­ண­டை­வதா? இல்லை வீர­மாகச் சாவதா என வரு­கின்­ற­போது சர­ண­டை­யாமை என்ற முடி­வுக்குப் போகின்றான் மன்னன் லியோ. முந்­நூறு படை­வீ­ரர்­களைக் தெரிந்தெடுத்­துக்­கொண்ட மன்னன் லியோ தோல்வி நிச்­சயம் எனத் ­தெ­ரிந்துகொண்டும் மூன்று இலட்சம் பெர்­சி­யப்­ப­டை­க­ளுக்கு எதி­ராக யுத்­தத்­திற்குச் சென்றான். இக்­க­தையைக் கொண்­டது தான் திரி கண்ரட் படம். இத்­தி­ரைப்­படம் 2008இல் வெளியா­கி­யது. சில­மா­தங்­க­ளி­லேயே வன்­னிக்கு வந்­து­விட்­டது.

ஈரோஸ் இயக்­கத்தின் தலைவர் பால­கு­மாரன் நான்காம் கட்ட ஈழப்­போரின் போக்கு குறித்து விச­ன­முற்று புலி­களின் தலை­மைக்கு விண்­ணப்­ப­மொன்றைச் செய்தார். அதிலே தமி­ழீழ விடு­த­லைப்­போ­ராட்­டத்தின் வெளியு­ற­வுக்­கொள்கை மீள­ வ­ரை­யப்­ப­ட­வேண்டும். அந்த வெளியு­ற­வுக்­கொள்கை வரை­யப்­ப­டு­வ­தற்கு குழு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கோரினார். அந்­தக் ­கோ­ரிக்­கைக்கு புலி­களின் தலை­மையின் பதில் என்ன தெரி­யுமா? திறி­கண்ரட் ஹொலிவூட் படம் தான் பதி­லாக இருந்­தது. ஹொலிவூட் உற்­பத்­தி­யி­லி­ருந்து அந்த இயக்கம் எத­னைப் ­பெற்­றுக்­கொண்­டது. சர­ண­டை­யாது சாவ­டையும் மன்னன் லியோ வின் வீரத்தை தான் அவர்கள் பெற்­றுக்­கொண்­டார்கள்.

மாறாக அமெ­ரிக்கா கரு­தி­யது போன்று, இது­வொரு ஜன­நா­யக நாடு. இவ்­வா­றான படங்­களை உற்­பத்திசெய்­கின்­றது என்ற மென்­சக்திக் கவர்ச்­சியை அவர்கள் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. எனவே ஒரு சமூகம் தன்­னு­டைய பாது­காப்பு, நிதிக்­கட்­ட­மைப்பு என்­ப­வற்­றுக்கு அப்பால் பலத்தை பெற­வேண்­டி­யுள்­ளது. அந்த பலத்தை தான் மென்­சக்தி என ஜோசப் நை கூறு­கின்றார்.

இந்த நிலையில் மென்­சக்தி பற்­றிய சில முடி­வு­க­ளுக்கு வர­மு­டியும். அது அமெ­ரிக்­காவின் கருத்­து­ருவம். ஏக­போக வல்­ல­ர­சாக வளர்ச்­சி­ய­டைந்த அமெ­ரிக்கா தன் ­பா­து­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக தன்­னு­டைய இரா­ஜ­தந்­திர நிகழ்­வுக்குள் உள்­ளெ­டுத்­துக்­கொண்ட ஒரு பிர­யோகம். வன்­சக்­தியின் போதாமை விளைவு. வன்­சக்­தியை அடித்­த­ள­மாக கொண்ட நாடுகள் தான் மென்­சக்தி பற்றி சிந்­திக்­கின்­றன. இது தமி­ழர்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு விடயம். அதா­வது, வன்­சக்­தியை வைத்­துக்­கொண்டு தான் அவர்கள் மென்­சக்தி பற்றி கதைக்­கின்­றார்கள். இதற்கு சிறந்த உதா­ரணம் ஜேர்­ம­னி­யாகும்.

அண்­மையில் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­றது இனப்­ப­டு­கொ­லை­யென ஜேர்­மனி அறி­வித்­தது. அதனால் துருக்­கி­யு­ட­னான உற­வு­களும் பாதிக்­கப்­பட்­டன. ஆனால் கடந்த நூற்­றாண்டின் மிகப்­பெரும் இனப்­ப­டு­கொலையை யூதர்­க­ளுக்கு எதி­ராக ஜேர்­ம­னியே செய்­தது. அதே­நேரம் ஆர்­மேனியப் படு­கொ­லையில் ஜேர்­ம­னியும் மறை­மு­கப்­பங்­காளி. எனவே ஜேர்­மனி தனது பாவக்­கையை கழுவ முற்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் தன்னை ஒரு மென்­சக்­தி­யாக உயர்த்­திக்­கொள்ள முயல்­கின்­றது. ஏனென்றால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இரண்­டா­வது பெரும் பொரு­ளா­தார நாடாக ஜேர்­மனி உள்­ளது. உல­கத்தின் நான்­கா­வது பெரி­ய ­பொ­ரு­ளா­தார நாடு ஜேர்­மனி. அது­மட்­டு­மல்ல சிரியா விட­யத்தில் ஜேர்­மனி மிகத்­தா­ர­ள­மாக நடந்­து­கொண்­டது ஏன்?

DSC01249-Lஏனென்றால் ஜேர்­மனி தனது முகத்தை மாற்­றிக்­கொள்ள முற்­ப­டு­கின்­றது. கடந்த நூற்­றாண்டில் வன்­சக்­தியைப் பிர­யோ­கித்து இந்த உல­கத்தின் மீது தனது ஆதிக்­கத்தை பெற­மு­னைந்து தோற்­க­டிக்­கப்­பட்ட ஒரு நாடு இந்த நூற்­றாண்டில் தன்­னை­யொரு மென்­சக்­தி­யாக கட்­டி­யெ­ழுப்ப முற்­ப­டு­கின்­றது. அதன் கார­ணத்தால் தான் ஆர்மேனிய இனப்­ப­டு­கொ­லையை இனப்­ப­டு­கொ­லை­யென பகி­ரங்­க­மாக அங்­கீ­க­ரித்­தது. மிக­முக்­கி­ய­மாக கவ­னிக்­க­வேண்­டி­யது ஜேர்மன் தன் வன்­சக்­தியை விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை.

பிரித்­தா­னியா உலகின் முத­லா­வது மென்­சக்தி நாடென வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. தன் வன்­சக்­தியை விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை. பிரித்­தா­னிய பிர­தமர் கெமரூன் பத­வி­யி­லி­ருந்து விலகி மிக எளி­மை­யாக தனது வீட்டை விட்டு வில­கிச்­செல்­வதை பார்க்­கின்றோம்; ரசிக்­கின்றோம்; புகழ்­கின்றோம். ஆனால் பிரித்­தா­னியா இந்த வளர்ச்­சியை வன்­சக்தி மூலம் தான் அடைந்­தது. கடந்த நூற்­றாண்­டிலும் அதற்கு முன்­னைய நூற்­றாண்­டு­க­ளிலும் கீழைத்­தேய நாடு­களில் அவர்கள் நடத்­திய ஆக்­கி­ர­மிப்பு யுத்­தங்­களின் மூலம் திரட்­டப்­பட்ட செல்­வங்­களின் மூலமும் தான் பிரித்­தா­னியா தற்­போ­துள்ள வன்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்­தது.

மென்­சக்தி பற்றி கதைக்கும் இந்த நாடுகள் எல்லாம் வன்­சக்தி அடித்­த­ளங்­களை கொண்­டி­ருக்­கின்­றன. வன்­சக்தி இறந்­த­கா­லத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றன. வன்­சக்தி இன்றி மென்­சக்தி இல்லை என்ற நிலை தான் உண்டு. ஸ்மாட் பவர் எனப்­ப­டு­வது வன்­சக்­தியும் மென்­சக்­தியும் இணைந்­தது தான் என ஜோசப் நை கூறு­கின்றார். இதுதான் வன்­சக்தி மென்­சக்தி பற்றி உல­க­ளா­விய படம். தற்­போது எமது படத்­திற்கு வருவோம்.

எமது நிலைமை என்ன? புலிகள் இயக்கம் தற்­போது அரங்கில் இல்லை. புலி­களை ஆத­ரிப்­பது சட்­டப்­படி குற்றம். புலி­களின் பாடல்­களை கேட்­பதும் சட்­டப்­படி குற்றம். ஆனால் புலி­களை ஆத­ரிப்­ப­வர்கள் இருக்­கின்­றார்கள். எல்லா ஆபத்­துக்­க­ளையும் மீறி புலி­களின் அபி­மா­னி­க­ளாக இருக்­கின்­றார்கள். வன்­சக்­தி­யாகக் காணப்­பட்ட இயக்கம் தற்­போது மென்­சக்தி கவர்ச்­சி­யாக காணப்­ப­டு­கின்­றதே எப்­படி?

சில கிழ­மை­க­ளுக்கு முன் காஷ்­மீரில் ஒரு இளம் போராளி கொல்லப்­பட்டான். அவரை ஆத­ரிப்­பது அவ­ரு­டைய ஊர்வ­லத்தில் கலந்துகொள்­வது காஷ்­மீரைப் பொறுத்­த­வ­ரையில் சட்­டப்­பி­ரச்­சினை. ஆனால் இரண்டு இலட்சம் காஷ்­மீ­ரி­யர்கள் அந்த இறுதி ஊர்வ­லத்தில் கலந்துகொண்­டார்கள். ஒரு வன்­சக்­திக்கு காட்­டப்­பட்ட மென்­சக்தி ஆத­ரவு அது­வாகும். வன்­சக்தி தமிழ் மக்கள் மத்­தியில் இல்லை. ஆனால் அதன் மென்­சக்தி நீட்சி இருக்­கின்­றது.

தமிழ்த்தரப்பில் மென்­சக்­திக்­கான தேவை உண்டா?

இந்­நி­லையில் எமக்கு ஒரு மென்­சக்தி வேண்டுமா? ஏன் வேண்டும்? தற்­போ­துள்ள நிலை­மையில் முஸ்லிம் பகு­திகள் தவிர்ந்த வடக்கு, கிழக்கை இணைத்து 13ஐ விட கொஞ்சம் செறி­வான அதி­கா­ரங்­களை உடைய ஒரு கட்­ட­மைப்பு போது­மெனக் கரு­து­வோ­மா­க­வி­ருந்தால் மென்­சக்தி தேவை­யில்லை. தற்­போ­துள்ள நிலை­மை­க­ளுக்குள் ஒற்­றை­யாட்­சிக்கு நோகாது ஏதோ­வொன்றைப் பெறப்­போ­கின்றோம் என்றால் எமக்கு மென்­சக்தி தேவை­யில்லை. தமிழ் மக்கள் தங்­களை ஒரு தேசிய இன­மாக சிந்­திக்­கும்­போது தான் மென்­சக்தி அவ­சி­ய­மா­கின்­றது

——————————————–

part 2

தமிழ் மக்­களிள் பிரச்­சினை சிறு­பான்மை விவ­கா­ர­மாகக் கரு­தப்­ப­டு­மாயின் மென்­சக்தி தேவை­யில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சினை தேசிய பிரச்­சி­னை­யாக கரு­தப்­ப­ட­வேண்டும். அந்த தேசிய இனத்­திற்­கு­ரிய சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் ஒரு உச்­ச­பட்ச தன்­னாட்சி அதி­கா­ரங்­களை கேட்­கப்­போ­கின்றோம் என வரு­கின்­ற­போது தான் தமிழ் மக்­க­ளுக்கு மென்­சக்தி தேவை.

அவ்­வாறு கோரு­கின்­ற­போது தற்­போது பெரும்­பான்­மை­யி­னத்தின் பெரும்­பான்மை காணப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்ற நடை­முறை ஊடாக அதனை பெற­மு­டி­யுமா? இல்லை. அவ்­வா­றாயின் வேறு எப்­படி பெறப்­போ­கின்றோம். அத­னைப்­பெ­று­வ­தற்­கான மக்கள் இயக்கம் அல்­லது மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பாடு எம்­மி­டத்தில் உண்டா? இல்லை. அவ்­வா­றாயின் எவ்­வாறு பெறப்­போ­கின்றோம். இரா­ஜ­தந்­திர நடை­மு­றை­யூ­டாக பெறப்­போ­கின்றோம் என்றால் இரா­ஜ­தந்­திர நில­வரம் எப்­ப­டி­யி­ருக்­கின்­றது?

அண்­மையில் அமெ­ரிக்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் இலங்­கைக்கு விஜயம் செய்து சென்­றி­ருக்­கின்றார். அவர் என்ன சொன்னார்? அவர் இலங்கை வந்­த­தி­லி­ருந்து ஒரு­வி­ட­யத்தை தெளி­வாக கூறி­வ­ரு­கின்றார். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி. கடந்த 16 மாத­கா­ல­மாக இலங்­கையின் எல்லா விட­யங்­க­ளையும் நிலை­மா­று­கால நீதி என்ற விட­யத்­திற்குள் வைத்தே அணு­கி­னார்கள். தற்­போது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­கின்­றார்கள். நிஷா பிஷ்வால், கொழும்பு துறை­மு­கத்தை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மெனக் கூறு­கின்றார். அது­மட்­டு­மல்ல இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக கட்­டி­யெ­ழுப்­பு­வது பற்­றியும் கதைக்­கின்றார்.

மற்­றொரு சிங்­கப்­பூ­ராக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தென்றால் என்ன? இன­மு­ரண்­பா­டு­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யூ­டாக கடக்­கலாம் என அவர் நம்­பு­கின்றார். பொரு­ளா­தார வளர்ச்சி மூலம் எல்­லா­வற்­றையும் மீறி ஓடலாம் என அவர் நம்­பு­கின்றார். நிஷா பிஷ்­வாலின் கடைசி உரையில் அவ­ரு­டைய செய்தி தெளிவாக தெரி­கின்­றது. அதா­வது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மூலம் எல்­லா­வற்­றையும் செய்­ய­மு­டியும் என்ற செய்­தியை அமெ­ரிக்கா எமக்கு தர முற்­ப­டு­கின்­றது. நிலை­மையும் அவ்­வா­றுதான் உள்­ளது. நிலை­மாறு கால நீதியை வழங்­கு­வ­தற்­காக பொது­மக்­களின் கருத்­துக்­களை அறி­யச்­செல்­கின்­ற­போது ஒரு­ப­குதி மக்கள் எமக்கு நிவா­ரணம் தந்­தாலே போதும் எனக் கூறு­கின்ற அள­வுக்கு களைத்தும் சலித்தும் போய்­விட்­டார்கள்.

காணா­மல்­போ­கச் ­செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களில் ஈடு­பட்டு நொந்­து­போய்­விட்­டார்கள். வய­தா­கிப்­போய்­விட்­டார்கள். இவ்­வாறு நிலைமை நீடித்­துச்­சென்றால் மக்கள் படிப்­ப­டி­யாக அரசியல் நீக்கம் செய்­யப்­ப­டு­வார்கள். படிப்­ப­டி­யாக மக்கள் அர­சியல் நீக்கம் செய்­யப்­படும் சூழலில் பொரு­ளா­தார வளர்ச்­சி­யூ­டாக அவர்­களை முழு­மை­யாக அர­சியல் நீக்கம் செய்­யலாம்.

அமெ­ரிக்­காவின் கொழும்­புத்­து­றை­மு­கத்தை மைய­மா­கக்­கொண்டு இலங்­கையை சிங்­கப்­பூ­ராக கட்­டி­யெ­ழுப்­பு­வது என்ற செய்­தி­யூ­டாக நாம்

­சிந்­திப்­போ­மா­க­வி­ருந்தால் நிலைமை மோச­மா­க இ­ருக்­கின்­றது என்­பதே அர்த்­த­மாகும். தமிழ் மக்கள் ஜெனி­வாவை மட்டும் மைய­மாகக் கொண்டு சிந்­திக்­கின்றோம். ஜெனி­வாவை நாம் அடி­யொற்றி நிற்கும் போது தமிழ் மக்­களின் இனப் பிரச்­சி­னையை வெறு­மனே மனித உரிமைப் பிரச்­சி­னை­யாக அவர்கள் சுருக்­கு­கின்­றார்கள். நிலை­மாறு கால நீதி என்ற விட­யத்­தினால் மேலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை சுருக்­கு­கின்­றார்கள்.

எமது விவ­காரம் புது­டில்­லி­யிலும், வொஷிங்­ட­னிலும் கையா­ளப்­படும் விட­ய­மா­க­வி­ருக்­கின்­றது. நாங்கள் ஆறு ஆண்­டு­க­ளாக எமது பிரச்­சி­னை­களை மனித உரிமைப் பிரச்­சி­னை­யாக ஜெனி­வாவில் வைத்­தி­ருக்­கின்றோம். அவர்கள் ஜெனி­வாவில் எம்மை கட்­டிப்­போட்­டது மகா வெற்­றி­யாகும். இதுவே நிலைமை. தற்­போ­துள்ள அர­சாங்கம் மேற்கு நாடு­க­ளி­னதும், இந்­தி­யா­வி­னதும் குழந்தை. தன்­ குழந்­தை­யைத்தான் அவர்கள் பாது­காப்­பார்கள். அப்­பி­ர­ச­வத்­திற்கு தமிழ் மக்­க­ளா­கிய நாமும் மருத்­து­விச்­சி­க­ளாக இருந்­தி­ருக்­கின்றோம்.

குழந்தை பிறந்த பின்னர் மருத்­து­விச்­சிக்கு ஒரு கட்டம் வரையில் தான் மதிப்­ப­ளிக்க முடியும். ஆகக்­கு­றைந்­தது முத­லா­வது பிறந்த­ தி­னத்­திற்கு அழைக்­க­மு­டியும். தொடர்ந்தும் மருத்­து­விச்­சியை கொண்டு செல்ல முடி­யாது. மஹிந்த ராஜபக் ஷ எழுச்சி பெறும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இது நீலக்­கு­ழந்தை எனக்­கூறி பெட்­டியில் வைத்து பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. குழந்­தையை பாது­காப்­பதா? மருத்­து­விச்­சியைப் பாது­காப்­பதா? குழந்­தையைப் பாது­காப்­பது என்ற முடிவை அவர்கள் எடுத்து விட்டால் குழந்­தைக்கு நோகக்­கூ­டாது. போர்க்­குற்றம் தொடர்­பாக பேசினால் குழந்தை அழும். அனைத்­து­லக விசா­ரணை என்று பேசினால் குழந்­தைக்கு காய்ச்சல் வரும். அதற்கு மேலே சென்றால் தேங்காய் உடைப்­பார்கள். ஒற்­றை­யாட்­சியை நீக்­குங்கள் என்றால் குழந்­தைக்கு ஏற்­பு­வலி வந்­து­விடும். குழந்­தையை பாது­காக்­க­வேண்டும். மருத்­து­விச்­சியை அல்ல.

தமது குழந்­தையை பாது­காக்­க­வேண்­டிய அனைத்­து­லக சமூகம் தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை நாங்கள் விரும்பும் அந்த அடர்த்­தியில் பெற்­றுத்­த­ராது. இது­வொரு எதிர்­ம­றை­யான நிலைமை. அது மைத்­திரி, ரணில் அர­சாங்­கத்தை தான் பாது­காக்க முற்­படும். இங்­கேயும் எமக்­கான தீர்வின் அடர்த்தி குறை­யப்­போ­கின்­றது. சர்­வ­தேச உள்­நாட்டு நில­வ­ரங்­களின் பிர­காரம் நாம் தேசிய இனம் என்ற நிலையில் உச்­ச­பட்ச தன்­னாட்சி கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அரு­கிச்­செல்­கின்­றன. இந்த கசப்­பான யதார்த்தத்தை முதலில் விளங்­கிக்­கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பே மிகப்­பெரும் சவால். இந்த யதார்த்­தத்தை எவ்­வாறு கையா­ளப்­போ­கின்றோம். தற்­போ­துள்ள பாரம்­ப­ரிய மித­வாதக் கட்­சி­களால் இந்த நிலை­மையை கையாள முடி­யுமா? கையாள முடி­ய­வில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன?

தமிழ் மென்­சக்­தியை எப்­படி கட்­டி­யெ­ழுப்­பலாம்?

எங்­களால் ஒரு மக்கள் இயக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யுமா? மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்ப போகின்றோம் எனக் கூறிக்­கொண்டு செயற்­பாட்டு இயக்­கங்­களை கட்­டி­யெ­ழுப்ப முடி­யுமா? ஏழு­வ­ரு­டங்­க­ளாக பேசு­கின்றோம். எழு­து­கின்றோம். முக­நூலில் சண்டை பிடிக்­கின்றோம். எது­வுமே நடக்­க­வில்லை. கடந்த 16மாதங்­க­ளாக மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­ப­டுத்­தித்­தந்த ஒப்­பீட்­ட­ள­வி­லான சிவில் ஜன­நா­யக வெளியை தமிழ் மக்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­தி­ருக்­கின்­றார்கள் என்­றுதான் சொல்­ல­வேண்டும். சிவில் வெளியை பயன்­ப­டுத்த தான் அது அதி­க­ரிக்கும். அப்­போது தான் மென்­சக்­தியின் வலுவும் அதி­க­ரிக்கும்.

எங்­க­ளி­டத்தில் போதி­ய­ளவு செயற்­பாட்­டி­யக்­கங்கள் வர­வில்லை. எங்­க­ளி­டத்தில் முழு நேர செயற்­பாட்­டா­ளர்­களே கிடை­யாது என்­பது கசப்­பான விடயம். ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­ளவில் முழு­நேரச் செயற்­பாட்­டா­ளர்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிடம் தான் உண்டு. பிர­தே­ச­சபை, மாகா­ண­சபை,பாரா­ளு­மன்றம் என அர­சி­யலே முழு­நேர செயற்­பா­டாக கொண்­டி­ருப்­ப­வர்கள் கூட்­ட­மைப்­பிடம் தான் உள்­ளனர். ஏனைய கட்­சி­க­ளிடம் மிகச்­சிலர் தான் உண்டு.

தமிழ்­மக்­க­ளி­டத்தில் தோன்­றிய செயற்­பாட்­டி­யக்­கங்கள் எனப் பார்க்­கையில் பகுதி நேர செயற்­பாட்­டா­ளர்­களே உள்­ளனர். பௌர்­ணமி நாளில் கூடி அர­சியல் கதைப்­ப­வர்கள். நாம் அதி­க­பட்சம் ஓய்­வு­நே­ரத்தில் தான் அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்றோம். அர­சி­யலே முழுத்­தொ­ழி­லாக செய்­ப­வர்கள் எம்­மி­டத்தில் குறைவு. செயற்­பாட்­டுத்­தளம் கூட்­ட­மைப்­பி­டத்தில் தான் உள்­ளது. முழு நேர­மாக ஒருவர் செயற்­ப­டு­வ­தாக இருந்தால் அதற்கு பல விட­யங்கள் தேவை­யா­கின்­றது.

ஆயு­தப்­போ­ராட்­டத்தை இயக்­கங்கள் ஆரம்­பித்த போது உணவு, உடை போன்ற அனைத்து விட­யங்­களை வழங்கி பரா­ம­ரித்­தார்கள். அதன் பின்னர் கொடுப்­ப­னவு செய்­தார்கள். பின்­ன­ரான காலத்தில் திரு­மணம் செய்தால் அதற்கும் கொடுப்­ப­னவு செய்­தார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் குடும்­பத்தை, தொழிலை கவ­னிக்க வேண்டும். செயற்­பாட்டு­ இ­யக்­க­மா­கவும் இருக்க வேண்­டு­மென்றால் முடி­யாத காரியம். இது தான் மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் எமக்­குள்ள பிர­தான பிரச்­சினை. இத­னா­லேயே பாரம்­ப­ரிய மித­வா­தத்­திற்­குள்­ளேயே செல்­கின்­ற­மைக்­கான அடிப்­ப­டை­யா­க­வுள்­ளது. கூட்­ட­மைப்பு தமிழ் மக்­கள்­மத்­தியில் நிலைக்­கின்­றது என்றால் அதற்­கான அடிப்­ப­டையும் இதுதான்.

ஆகவே தமிழ் மக்கள் மத்­தியில் மென்­சக்தி என்ற உரை­யாடல் சுக­மான கற்ப­னை­யா­கத்தான் உள்­ளது. வன்­சக்­தியும் இல்லை. மறு­பக்­கத்தில் கனவு காண்­கின்றோம். எமது பேரம் தாழ்ந்­து­கொண்டே போகின்­றது. வடக்கு, கிழக்கே சவா­லா­கி­விட்ட நிலையில் எப்­படி ஒற்­றை­யாட்­சிக்கு வெளியே போகக்­கூடிய தன்­னாட்­சியைப் பெறப்­போ­கின்றோம். அதற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியே போராடும் வலு எமக்­குண்டா? அந்த வலுவை நாம் எப்­படி பெறப்­போ­கின்றோம். இங்­கி­ருந்து தான் நாம் தமிழ் மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்­பலாம்.

நாம் ஜோசப் நையின் அடிப்­ப­டை­யில்­இ­ருந்து சிந்­திக்­க­வேண்­டி­ய­தில்லை. அது­வொரு அமெ­ரிக்கச் சிந்­தனை. அவர் அர­சற்ற தரப்­புக்­க­ளாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஐ.நா. நிறு­வ­னங்கள் உள்­ளிட்ட வற்றை கரு­து­கின்றார். அர­சற்ற தரப்­பாக விருக்கும் இனங்­களை அவ­ரு­டைய ஆய்­வுக்குள் உட்­ப­டுத்­த­வில்லை. அது அமெ­ரிக்­காவின் நோக்கு நிலை. நாம் அர­சற்ற தரப்பு. ஆகவே அமெ­ரிக்­காவின் கண்­கொண்டு இந்த உல­கத்தை பார்க்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

நாம் எமது மக்­களின் கூட்டுக் காயங்­க­ளி­லி­ருந்தும், கூட்டு மன­வ­டுக்­க­ளி­லி­ருந்தும் எமது பிரச்­சி­னையை அணு­கலாம். அவ்­வாறு அணு­கும்­போது தமிழ் மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்­பு­வது எப்­படி? முதலில் தமிழ் மக்கள் தங்­களை தேசிய இனம் என்று ஏற்­றுக்­கொள்ள வேண்டும். தேசிய இனம் என்ற அடிப்­ப­டையில் சுய­நிர்ணய உரி­மையின் பிர­காரம் உச்­ச­பட்­ச தன்­னாட்சி தேவை­யென்­பதை முடி­வெ­டுக்­க­வேண்டும். அது பாரா­ளு­மன்ற செயற்­பா­டு­களால் மட்டும் கிடை­யாது என்­ப­தோடு அதற்­கு­ம் ­வெ­ளியே மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட செயற்­பா­டுகள் ஊடா­கவும், இராஜ்ஜிய செயற்­பா­டுகள் ஊடா­கவும் தான் பெறலாம் என்ற முடி­வுக்கு வர­வேண்டும்.

அவ்­வாறு வரும்­போது தமி­ழ­கமும், புலம் பெயர் சமூ­கமும் தவிர்க்­கப்­பட முடி­யாத இரு சிற­குகள் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். புலம்­பெயர் சமூ­கத்தை ஒரு இராஜ்­ஜிய செல்­வாக்கு மிக்க சக்­தி­யாக கட்­டி­யெ­ழுப்­பு­வது என்ற முடிவை மேற்­கொள்­ள­வேண்டும். இங்கு களத்தில் உள்ள தலைமை தான் அந்த முடிவை எடுக்­க­வேண்டும். அதன் ஊடா­கவே தமிழ் மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

தேசிய இன­மாக சிந்­திக்க ஆரம்­பிக்­கின்­ற­போது உள்­ளூ­ரிலும், அய­லூ­ரிலும்,அனைத்­துலக மட்­டத்­தி­லி­ருந்தும் ஆபத்­துக்கள் வரும். எதிர்­கொள்­ளத்­த­யா­ராக விருக்­க­வேண்டும். ரிஸ்க்­ எ­டுங்கள். கடந்த பத்­தாண்­டு­களில் சிங்­கத்­த­லை­வர்கள் எடுத்த ரிஸ்க்கை உதா­ர­ண­மாக பார்க்­கலாம். மைத்­தி­ரி­பால சிறி­சேன சிங்­கள கடும்­போக்கு வாதத்­திற்கு தலை­மை­தாங்க கூடிய ஒரு தலை­வ­ராக தோன்­ற­வில்லை. ஆனால் இலங்கை தீவில் நிகழ்ந்­தி­ருக்கும் தற்­போ­தைய மாற்­றத்­திற்கு அவர் எடுத்த ரிஸ்க் தான் காரணம். ஒரு நாள் முழு­வதும் அவர் தென்­னந்­தோப்­பினுள் ஒளிந்­தி­ருந்­தி­ருக்­கின்றார். சந்­தி­ரி­காவும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் எடுத்த அந்த ரிஸ்க் தான் தற்­போது இலங்கை அனு­ப­விக்கும் இந்த மாற்­றத்­திற்கும் அனைத்­து­லக சமூகங்கள் அனு­ப­விக்கும் தற்­போ­தைய நிலை­மைக ளுக்கும் கார­ண­மா­கின்­றது.

ஏன் எமது தலை­வர்கள் குறைந்த பட்சம் அந்­த­ள­வுக்கு கூட ரிஸ்க் எடுக்­கக்­கூ­டாது. நாம் எமக்கு சரி­யெனப் பட்ட ஒன்­றுக்­காக ரிஸ்க் எடுக்­க­வேண்டும். மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜபக் ஷ போன்று மிடுக்­காக, கடும் குர­லுடன் இருக்கும் ஒருவர் அல்ல. ஆனால் பாரிய ரிஸ்க்கை எடுத்­தி­ருக்­கின்றார். தன்­னு­டைய சமூ­கத்­திற்கு நல்­லது செய்­ய­வேண்­டு­மென்­ப­தற்­காக ரிஸ்க் எடுத்­தி­ருக்­கின்றார். நாமும் அவ­ரைப்போல் ரிஸ்க் எடுப்­போ­மா­க­வி­ருந்தால் எங்கள் அர­சி­யலை அதி­ர­டி­யாக மாற்­றலாம். நாம் ரிஸ்க் எடுக்­காத மக்கள் இல்லை. 2009இற்கு முன்­னர் ­நாங்கள் ரிஸ்க் எடுத்­தி­ருக்­கின்றோம். யாழ்ப்­பாண கிடு­கு­வேலி கந்­த­பு­ராண கலா­சா­ரத்­தி­லி­ருந்து கரும்­பு­லிக் ­க­லா­சாரம் வரையில் போராட்டம் கொண்­டு­வந்து விட்­டுள்­ளது. கரும்­புலி கலா­சா­ரத்தை முழு உல­கமும் அதிர்ச்­சி­யோடு திரும்­பிப்­பார்த்­தது. அது­வொரு வன்­சக்தி. அவ்­வ­ாறான மாற்­றத்தை காட்­டிய மக்கள் நாங்கள். எங்­களால் அதன் அடுத்த கட்­டத்­திற்குச் செல்­ல­மு­டி­யாதா? ஒரு மென்­சக்­தியை எங்­களால் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாதா? அதற்­கான மூலக்­கூ­றுகள் எங்­க­ளி­டத்தில் இல்­லையா?

2009 இற்கு முதல் நாம் அதனைக் கொண்­டி­ருந்தோம். எனவே தமிழ்த் தலை­வர்­களும் தமிழ்ச் செயற்­பாட்டு இயக்­கங்­களும் தமக்கு சரி­யெ­னப்­பட்ட ஒன்­றுக்­காக ரிஸ்க் எடுக்கத் தயா­ரா­க­ வேண்டும்.

குறைந்த பட்சம் சந்திரிகா, மைத்திரி போலாவது ஆகக்குறைந்த ரிஸ்க் எடுக்க தயாராகவேண்டும். அவ்வாறு ரிஸ்க் எடுக்க தயாராகின்றபோது தான் தமிழ் மென்சக்தியை கட்டியெழுப்பலாம். அப்படி கட்டியெழுப்பப்படும் ஒரு மென்சக்திதான் தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரும்

தொகுப்பு:- ஆர்.ராம்

 

Share This Post

Post Comment