10 வாரங்களில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம்!

Thermo-Care-Heating

bridgeeee._L_styvpfசுவிட்சர்லாந்து நாட்டில் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் சுவட்சர்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன் செர்மட் பள்ளத்தாக்கை கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகும். மேம்பாலம் கட்டியதன் மூலம் வெறும் 10 நிமிடமாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலம் தரையிலிருந்து 85 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 65 செ.மீட்டராகும். இது கடல் மட்டத்திலிருந்து 7218 அடி உயரத்தில் உள்ளது. அதிக உயரத்தை விரும்புவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த மேம்பாலத்தில் பயணம் செய்வது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இதற்கு முன்பாக ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது. அந்த சாதனையை சுவிட்சர்லாந்து மேம்பாலம் முறியடித்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த நடைமேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Worlds-Longest-Suspension-Footbridge- bridges._L_styvpf

ideal-image

Share This Post

Post Comment