கனடா தியட்டர்களில் கபாலி படத்துக்கு தடை

ekuruvi-aiya8-X3

டொரோண்டோ Cineplex தியட்டர்களில் கபாலி படத்துக்கு தடை

கடந்த ஏப்ரல் மாதம் Mississauga, ஸ்கார்பரோ மற்றும் பிராம்ப்டன்
திரையரங்குகளில் நடந்த மிளகு பொடி தாக்குதல்களை தொடர்ந்து தமிழ்
திரைப்படங்கள் Cineplex தியட்டர்களில் எதுவும் காட்டப்படவில்லை .

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான கபாலி திரைப்படம் முதல் காட்சி கனடாவில் தான் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று Cineplex செய்தி தொடர்பாளர் சாரா வான் லாங்கே CityNews செய்திக்கு கபாலி படத்துக்கு Cineplex நிர்வாகம் தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .

ஆனாலும் இது விடயமாக Cineplexநிர்வாகத்தினர் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்கள் .எனினும், கிருஷ்ணன் மற்றும் விநியோகஸ்தர் இருவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்கள் .

இந்நிலையில் ஏனைய தமிழ் தியட்டர்களில் கபாலி படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .இது விடயமாக கஜன் என்பவர் தனது முகநூலில் கருத்து பகிரும் போது “எதை எதிர்பார்த்தார்களோ.? அது நிகழ்ந்தே விட்டது.! இனி, குச்சுக் கொட்டகைகளில் போய்க் குந்துங்கள்; அது உங்களின் விதி.!!`என தெரிவித்தார் .

இது தொடர்பாக citynews வெளியிட்ட காணொளி

ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பிறகு படத்தின் புதிய பாடல் டீசரும் வெளியிடப்பட்டது. நெருப்புடா பாடலின் டீசர். ரஜினியின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் பரவசமடைந்தார்கள்.

இந்நிலையில் நேற்று கபாலி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றது. இதனையடுத்து படம் ஜூலை 22 அன்று வெளியாகும் என்று அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு.

இதனிடையே கபாலி படத்தின் பிரீமியர் என்கிற சிறப்புக் காட்சி ஜூலை 21 அன்று பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.

Share This Post

Post Comment