15 ரூபாவுக்­காக தலித் தம்­ப­தி­யை கோடாலியால் வெட்டிக் கொலை

Facebook Cover V02

7/30/2016

15 ரூபா கடன் பாக்­கியை தரா­ததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்­ப­தி­யை கோடாலியால் தாக்கி கொலை செய்த சம்­பவம் பீகாரில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உத்­த­ர­பி­ர­தேச மாநிலம் மணிப்­பூ­ரியைச் சேர்ந்­த அசோக் மிஸ்ரா என்ற மளிகை கடைக்­கா­ர­ரிடம் குறித்த தலித் தம்­ப­தி­யினர் 15 ரூபா­வுக்கு பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்­கி­யுள்­ளனர்.

ஆனால் பணத்தை பின்னர் தரு­வ­தாக கூறி­யுள்­ளனர். இந்­நி­லையில் தலித் தம்­ப­தி­யினர் வேலைக்கு செல்லும் போது அவர்­களை மறித்த, அசோக் மிஸ்ரா 15 ரூபா கடனை திருப்பி தரு­மாறு கேட்­டுள்ளார்.

ஆனால் பணத்தை தர கூடுதல் கால அவ­காசம் கேட்­டுள்­ளனர். இதை­ய­டுத்து அரு­கி­லி­ருந்த கோடாலியை எடுத்து, தலித் தம்­ப­தியை அவர் கொடூ­ர­மாக தாக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் இரத்த வெள்­ளத்தில் துடித்த இரு­வரும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். இதை­ய­டுத்து அசோக் தலை­ம­றை­வா­கி­விட்டார். அசோக் மிஸ்ரா குறித்து, கிராம மக்கள் அளித்த தக­வ­லின்­படி பொலிஸார் அவரை கைது செய்­தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக கடந்த ஜூலை 11 ஆம் திகதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்­டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் தலித் இளை­ஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்­ற­தாக கூறி, விலங்­கின ஆர்­வ­லர்கள் அவர்­களை நடு­வீ­தியில் நிற்­க­வைத்து சர­மா­ரி­யாக தாக்­கினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்­போது இச்­சம்­பவம் இடம்­பெற்­­றுள்­ளது

Share This Post

Post Comment