துப்பாக்கி சூட்டில் பலியான கர்ப்பிணி பெண்

Thermo-Care-Heating

can_pregதுப்பாக்கிச் சூட்டில், பலியான கர்ப்பிணி தாய்க்கு குழந்தை பிரசவிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ள சம்பவமொன்று ஈற்ரோபிக்கோ பகுதியில் நடந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரவு 11 மணியளவில் பெண் மில்ரனை சேர்ந்த 38 வயதுடைய கன்டிஸ் றோச்சல் பொப் என்ற கர்ப்பிணி தாய், நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரின் குழுந்தை பிரசவிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, தாயார் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கர்ப்பிணி தாய், கூடைப் பந்து போட்டி ஒன்றை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பயணித்த காரில் வைத்து அவர் சுடப்பட்டுள்ளார் என்றும், அப்போது அவருடன் காரில் மேலும் மூவர் இருந்தனர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் ஏனையவர்களுக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ள பொலிஸார், குறித்த வாகனத்தை இலக்கு வைத்தே அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிகதகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment