வடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை ஆதரவு

வடமாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்பிற்கு 2018 தமிழ்க்  கனடியர் நிதி சேர் நடை ஆதரவு 
36915083_1584386035022155_3113733461467201536_o(ரொறொண்டோ) இலங்கையின் வடமாகாணம் எங்கும் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அண்மிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கனடிய தமிழர் பேரவை நிதி சேர் நடை ஒன்றை ஓழுங்கு செய்துள்ளது. பேரவையின் 10 வது வருடாந்த நிகழ்வான இது  எதிர்வரும் செப்டம்பர் 09, 2018 அன்று ஸ்காபரோ தொம்ப்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது.
வலித் தணிப்பு பராமரிப்பு என்பது  முற்றிய நிலை நோயாளிகளுக்கு தனித்துவமான மருத்துவ மற்றும் செவிலிய பராமரிப்பு முறைகளை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறையாகும். 1.2 மில்லியன் மக்கள் வாழும் வட மாகாணத்தில் வருடாந்தம் 4,000 நோயாளிகளுக்கு வலித்தணிப்பு பராமரிப்பு சேவைகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்ட வசமாக வட மாகாணத்தில் இச் சேவைகள் போதாதது மட்டுமல்ல வழங்கப்படும் சேவைகளை நோயாளிகள் பெற்றுக்கொள்ளவல்ல போக்கு வரத்து சேவைகள் இன்மையும் இடர் தருவதே. போரின் தாக்கத்தினால் குடும்ப – சமூக கட்டுமானங்கள் தகர்க்கப்பட்ட முதியோர், நோயுற்றோர், வலுவிழந்தோர் ஆகியவர்களைத்  தனியே விட்டு விட்டு இளைய சமுதாயம் தேசம் கடந்து போனமையும் இந்  நிலைமைக்குக் காரணமாகிறது.
தெல்லிப்பளை ட்ரெயில் புற்றுநோய் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்களின் கருத்துப்படி, அங்கு வலித் தணிப்பு மருந்துகளின் போதாமை மட்டுமல்ல அங்கு பணி புரியும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தகுந்த பயிற்சிகளும் தேவைப்படுகிறதென்பதும் தெரியவந்துள்ளது. ” சிறந்த வலித் தணிப்பு பராமரிப்பு சேவைகளால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்த  பயிற்சி  மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போதாமையே  நோயாளிகள் விரிவான சேவைகளைப்  பெறமுடியாதிருப்பதற்கு காரணம், அதை மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம்  ” என்று வட மாகாண வலித் தணிப்பு பராமரிப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் மீரா செல்வக்கோன் கூறினார்.
2018 தமிழ்க்  கனடிய நிதிசேர் நடையின் போது சேகரிக்கப்படும் பணம் யாழ்ப்பாணத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நடமாடும் சமூக மருத்துவ சேவையை விஸ்தரிப்பதற்குப் பயன்படுத்தப்படும். இந்த சேவை அலகில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு சுகாதார உதவியாளர் ஆகியோர் அடங்குவர். நோய் முற்றிய நிலையிலுள்ளோரது வீடுகளுக்குச் சென்று தேவையான மருத்துவ செவிலிய சேவைகளை வழங்குவதே இதன் கடமை. தற்போது இந்த சேவை அலகு யாழ் மாவட்டத்தில்  மூன்று பிரிவுகளிலுள்ள புற்று நோயாளிகளைப்  பராமரிக்கிறது. இந்த நிதிசேர்நடையின் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தின் மூலம் இச் சேவையை மேலும் நான்கு பிரிவுகளுக்கு விஸ்தரிக்க திடடமிடப்பட்டுள்ளது. நடமாடும் பராமரிப்பு அலகினால் இதுவரை பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கிற்கும் மேலாகவே இருக்கும். இவ் விஸ்தரிப்பின் மூலம் முதல் தடவையாக புற்று நோயாளிகள் மட்டுமல்ல வலித் தணிப்பு தேவைப்படும் இதர நோயாளிகளும் மாற்றுத் திறனாளிகளும்கூடப் பயன் பெற முடியும். அத்தோடு, இந்நிதிசேர்நடை மூலம் சேகரிக்கப்படும் பணத்தின் ஒரு பகுதி வலித் தணிப்பு பற்றும் பராமரிப்பு மருந்து நிதியமொன்றை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். மருத்துத் தட்டுப்பாட்டினாலோ அல்லது அவற்றை வாங்குவதற்கு இயலாமை காரணமாகவோ அவதியுறும் நோயாளிகளுக்கு உதவிகளை வழங்க இந்த நிதியம் பயன்படும்.
” கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ்க்  கனடியர் நிதிசேர்நடை, Canadian Heart & Stroke Foundation, the Centre for Addiction and Mental health மற்றும் சம்பூர் வீடமைப்புத் திட்டம்  உட்பட பல முக்கிய சேவைகளுக்காக நிதி சேகரித்து வழங்கியுள்ளது எனவும் கனடாவில் வதியும் நண்பர்கள் மீண்டும் ஒரு தடவை முன் வந்து பங்களிப்பதன் மூலம் இப்படியான வெற்றிகரமான முயற்சிகளின் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் மக்களின் வாழ்வில் காத்திரமான மேம்பாடுகளை உருவாக்கலாம். வலித் தணிப்பு பராமரிப்பு என்பது எல்லோருக்குமானது. நாளை நாமே அச் சேவையயைப் பெறும் தேவையும் உருவாகலாம். எனவே நாம் இம் முயற்சியை ஆதரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் நாம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் !”  எனக் கனடிய தமிழர் பேரவையின் தலைவர் மருத்துவர் வி. சாந்தகுமார் கூறினார். “
நிகழ்வு: 10 வது வருடாந்த தமிழ்க்  கனடிய நிதிசேர்நடை
காலம்:  ஞாயிறு, செப்டம்பர் 9
இடம்:    தொம்ப்சன்  பூங்கா, பிரிம்லி ரோட் / லோரன்ஸ்  அவனியூ , ஸ்காபரோ
நேரம்:  காலை 8:30 – பதிவு  9:00 நடை ஆரம்பம்
மேலதிக தகவல்கள் மற்றும் உறுதிப் படிவங்களுக்கு, http://tamilcanadianwalk.com/ என்ற இணைப்பின் மூலம் எமது இணையத் தளத்தை அணுகியோ அல்லது 416-240-0078 என்ற இலக்கத்தை அழைத்தோ பெற்றுக்கொள்ள முடியும்.
இதர அணுகும்  முறைகள்:
Follow #tamilcanadianwalk2018 and #MakeEveryDayCount to track our campaign. You can find us on Social Media here:
Facebook: https://www.facebook.com/tmlcdnwalk/
Instagram: @tmlcdnwalk https://www.instagram.com/tmlcdnwalk
Twitter: @tmlcdnwalk https:/twitter.com/tmlcdnwalk
linked In: https://www.linkedin.com/company/tamil-canadian-walkathon/
For Media Inquiries please contact Piragal Thiru (416) 727-3430 , Tam Sivathasan (416) 804-3443

Related News

 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • ரொறன்ரோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை
 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *