ஹாக்கி: இந்தியாவை சமாளிக்குமா மலேசியா

உலக ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்திய ஆண்கள் அணி, மலேசியாவை சந்திக்கிறது.

உலக ஹாக்கி லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதி பெல்ஜியத்தில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றது. லீக் சுற்றில் பிரான்ஸ் (3–2), போலந்தை (3–0) வீழ்த்தியது. பாகிஸ்தானுடன் (2–2) ‘டிரா’ செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2–6 என வீழ்ந்தது.

இருப்பினும் ‘ஏ’ பிரிவில் 2வது இடம் பெற்ற இந்திய அணி(உலக ரேங்கிங்கில் 9வது இடம்), இன்று நடக்கும் காலிறுதியில் மலேசியாவை(12வது இடம்) சந்திக்கிறது. கடந்த போட்டியில் தற்காப்பு பகுதியில் இருந்த பலவீனங்களை இன்று சரி செய்து கொள்ள வேண்டும்.

சமீபத்திய அஸ்லான் ஷா தொடரில் மலேசியாவை 3–2 என வென்றது நமது வீரர்களுக்கு சற்று ஊக்கம் தரும்.

கடினமான அணி:

இந்திய அணி கேப்டன் சர்தார் சிங் கூறுகையில்,‘‘ மலேசிய அணி கடினமானது. எங்களால் முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளில் முழுத்திறமை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடுவோம். எதிரணிக்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைக்காமல் பார்த்துக் கொள்வோம்,’’ என்றார்.ஒலிம்பிக் வாய்ப்பு:

இந்த அரையிறுதி சுற்றில் முதல் 3 இடம் பெறும் அணிகளுக்கு 2016 ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும். இதைக் கவனத்தில் கொண்டு மலேசிய அணி வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுத் தராது என்பதால் இந்திய வீரர்களுக்கு கடுமையாக சவால் காத்திருக்கிறது.






Related News

  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *