ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டி?

ekuruvi-aiya8-X3

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

stalin_ma09தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள்.

கொளத்தூர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும், மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடவேண்டும் என்று ஏராளமானோர் மனு செய்திருந்தனர். அவரை தவிர்த்து வேறு யாரும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணலில் பங்கேற்றார்.

அவரிடம் கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்ட நேர்காணல் குழுவினர் கேள்விகள் கேட்டனர். அவற்றிற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். வேறு யாரும் விருப்பமனு கொடுக்காததால், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது.

Share This Post

Post Comment