விஜயகாந்தின் முடிவு திமுக மற்றும் அதிமுகவிற்கே சாதகம்

ekuruvi-aiya8-X3

pon_radhaமத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அவர்களின் உரிமை. ஒவ்வொரு கட்சிக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. அந்த வகையில் அவர்கள் அறிவித்துள்ளனர். விஜயகாந்தின் முடிவு, ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மட்டுமே சாதகமாக அமையும்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, ஐஜேகே போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், யார் தலைமை? என்ற கேள்வி எழாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அதே போன்ற நிலை சட்டப்பேரவைத் தேர்தலிலும் வர வேண்டும், அவ்வாறு செயல்பட்டால் ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று கூறினார்.

Share This Post

Post Comment