லின் டான் சாம்பியன்

24உகான்: சீனாவின் நடந்த ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் சீன வீரர் லின் டான் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவில் உள்ள உகான் நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–3’ வீரரான சீனாவின் லின் டான், தரவரிசையில் 12வது இடத்திலுள்ள சக வீரர் டியன் ஹவ்வெய்யை சந்தித்தார். முதல் செட்டை 21–19 என கைப்பற்றிய லின் டான், இரண்டாவது செட்டையும் 21–8 என தன்வசப்படுத்தினார். 50 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில், லின் டான் 21–19, 21–8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தாய்லாந்தின் ரட்சனாக் 20–22, 23–21, 21–12 என சீனாவின் லி ஜுயுரியை வீழ்த்தினார்.






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*