போயிங் B-52 போர் விமானத்தை பயன்படுத்தவுள்ளது அமெரிக்கா!

17-720x480ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள டேஷ் தீவிரவாத குழுவினரின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த அமெரிக்கா, அணுசக்தி திறன் கொண்ட போயிங் B-52 குண்டு பொழியும் விமானத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அண்மையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி எயார் ஃபோர்ஸ் டைம்ஸ் செய்திச் சேவை கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பான செய்தியொன்றை பிரசுரித்துள்ளது.

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் அமெரிக்க இராணுவத்தினர், நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தக் கூடிய பாரிய யோயிங் B-52 குண்டு பொழியும் விமானத்தைப் பயன்படுத்தி டேஷ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானம் முதன்முதலில் கடந்த 1954 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானம் எதிர்வரும் 2040 ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அத்தோடு, விமானப் பயணத்தின் ஒவ்வொரு தடவையின்போதும் 70 ஆயிரம் பவுண்ட்ஸ் இற்கும் அதிகமான எடை கொண்ட ஆயுத சுமைகளை தாங்கி பயணிக்கக் கூடிய வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக அறிவித்த அடுத்த சில நாட்களின் பின்னர், தென் கொரிய வான் பரப்பிற்கு மேலாக மிகத் தாழ்வாக யோயிங் B-52 குண்டு பொழியும் விமானத்தை அமெரிக்கா பறக்கவிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

டேஷ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஏற்கனவே தமது போர் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ள அமெரிக்கா, இந்த விமானத்தின் துணை கொண்டு தாக்குதல்களை மேலும் வலுவாக முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This Post

Post Comment