பாட்மின்டன்: இந்தியா மீண்டும் தோல்வி

24டங்குவான்: சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடரில் இருந்து இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று நடந்த தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
சீனாவில், அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் மலேசியாவிடம் வீழ்ந்தது. நேற்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, அக்சய் திவாகர் ஜோடி 10–21, 19–21 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் ஜி ஜங், கிம் சா ரங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல் 22–20, 17–21, 21–13 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் பே இயான் ஜுவை வீழ்த்தினார். அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் காஷ்யப் 21–13, 14–21, 13–21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோல்வி கண்டார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21–18, 12–21, 12–21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சங் இ நா, ஜங் குயங் இன் ஜோடியிடம் வீழ்ந்தது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மானு அட்ரி, சிக்கி ரெட்டி ஜோடி 12–21, 20–22 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் ஹா நா, கோ சங் ஹுயன் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
முடிவில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முன்னதாக மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்று தொடரில் இருந்து வெ ளியேறியது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*