நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை – நாசர்

ekuruvi-aiya8-X3

nazar_03_18தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடிகர்கள் ரமணா, உதயா, நடிகை லலிதா குமாரி ஆகியோர் 16,03,2016 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த நடிகர் நாசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் சங்க நலனுக்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடக்கிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

பின்னர் நாசரிடம், டிக்கெட் கட்டணம் எவ்வளவு? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘கட்டணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்து நடிகர் ரமணா நிருபர்களிடம் கூறும்போது, ‘6 ஓவர்கள் கொண்ட போட்டியாக காலை முதல் நடைபெறும். 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன. 50 நடிகர்கள் போட்டியில் விளையாடுகின்றனர். 50 நடிகைகள் உற்சாகப்படுத்துவார்கள்’ என்றார்.

Share This Post

Post Comment