தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்- குஷ்பு

ekuruvi-aiya8-X3

kushbooதமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்தித்தது. தி.மு.க.விடம் இருந்து 41 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றியை பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் காரணம் என்று முன்னாள் தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், மேலிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனையில் ஈடுபட்டது. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பியதும், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, நேற்று (11) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்போதுள்ள சூழ்நிலை, கட்சி வளர்ச்சி குறித்து விளக்கினார். மேலும், புதிய தலைவர் நியமனம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். தலைவர் பதவியை எனக்கு அளித்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை’ என்றார்.

Share This Post

Post Comment