தொலைபேசி மையங்கள்? பொதி சுமக்கப்போவது யாரு?

Facebook Cover V02
tholipesiதகவல் தொழில் நுட்பம் தனக்காக ஒத்தாசைக்கு வளர்த்து வரும் குழந்தைதான் Call Center என எங்கள் எல்லோராலும் அறியப்பட்ட தொலைபேசி மையங்கள். இவ்வகை மையங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது நல்ல தொழில் வாய்ப்பையும் வருமானத்தையும் எடுத்து வந்தது. இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வானளாவிய வளர்ச்சி இந்த உரையாடு மையங்களின் உயிரைப்பறித்து பால் ஊற்றி விடுமோ என்னும் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அது நைரோபியில் உள்ள Shopping Mall ஆக இருந்தாலென்ன இராயப்பேட்டையிலுள்ள Express Avenue Shopping Mallஆக இருந்தாலென்ன யுவதிகள், இளைஞர்கள், பெரியவர் என அனைவரையும் கவரும் வகையில் Shopping Mallகள் எல்லாம் சினிமாக் கொட்டகைகள், உணவு அங்காடிகள், உடுப்பு வர்த்தக நிலையங்கள் என பலதரப்பட்ட வாணிப நிலையங்கைள தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் மாய உலகமாக காட்சியளிக்கும்.
 
ஆனால் பிலிப்பைன்ஸ்சின் தலைநகரிலுள்ள SM Aura Shopping Mallஇன் கடசித்தளத்துக்கு மின்தூக்கி மூலம் சென்றால் ஒரு சினிமா கொட்டகையையோ அல்லது விலை உயர் ஆடைக்கடையையோ நீங்கள் பாரக்கப்போவதில்லை. மாறாக உலக வணிக நிறுவனங்களின் தொலைபேசி மைபங்களின்9 அணிவகுப்பைத்தான் பார்க்கமுடியும். எப்படி ஒரு Shopping Mallஇற்கு இளைஞர்கள், யுவதிகள், நடுத்தர வர்க்கத்தினர் தேவைப்படுகிறார்களோ அதேபோல்தான் தொலைபேசி மைபங்களுக்கும் நடுத்தர வாழ்வியலை விரும்புகின்ற இளைஞர்களும், யுவதிகளும் வேலையாட்களாக தேவைப்படுகிறார்கள். பிலிப்பீனர்களின் இந்த ஒழுங்கமைப்பு மிகவும் சாதுர்யமானது. நாளொன்றிற்கு குறைந்தது 100 பேராவது வேலைதேடி இந்த மையங்களுக்கு வருகிறார்கள்.
 
 
 
இவ்வாறு வருபவர்களில் பலரை உள்வாங்கும் இந்த தொலைபேசி மையங்கள் படிப்படியா தமது ஓர் அங்கமாக வந்தவர்களை மாற்றி விடுகிறது. இதனல் பிலிப்பைன்ஸ்சில் பல்லயிரக்கணக்கான மத்திய வர்க்கத்தினர் உருவாகிறார்கள். பிலிப்பைன்ஸ்சில் Shopping Mallகள் இல்லாத ஓர் இருந்தால் அங்கு தொலைபேசி மைபங்களும் இல்லை என்றுதான் பொருள்படும். ஆதலால் அ8(1)ங்கு மத்திய வர்க்கத்தினரும் இருக்கப் போவதில்லை. ஓர் குறிப்பிட்ட தொழில் வாய்ப்பின் மூலம் பொருளாதார மாற்றங் கொண்ட நாடாக பிலிப்பைன்ஸ்சைக் குறிப்பிடலாம். பிலிப்பைன்ஸ் அரசு தொலைபேசி மையங்களை அமைப்பதற்கு 1990ம் ஆண்டு அனுமதித்தது முதல் இன்றுவரை சுமார் 1,2மில்லியன் பேர் தொலைபேசி மையங்களில் பணியாற்றுகிறார்கள். இது பிலிப்பைன்ஸ்சின் உள்ளக தேசிய வருமானத்தில் 8%வீதம் ஆகும். அதோடு வளரும் இந்த வர்த்தகம் இந்தியாவில் இயங்கி வந்த பல தொலைபேசி மையங்களையும் தன்னகத்தே ஈர்த்திருப்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். 
 
பிலிப்பைன்ஸ்சின் இந்த வளர்ச்சி இத்தோடு முடிவுக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது புதிய பேசும் மென்பொருட்களும் எந்திரன்களும்(robot), முதலில் ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ்சை தங்களுக்கான தொலைபேசி மையங்கள் உள்ள நாடாக தேர்ந்தெடுத்தன என்பதைப் பார்ப்போமேயானால் முக்கியமாக பிலிப்பைன்ஸ்சின் தொலைபேசி அழைப்பு முறமையை வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சார்பாக மாற்றி அமைத்தமை  இரண்டாவதாக இந்தியா தவிர்ந்த வேறு ஒரு நாட்டில் தங்களுக்கான தொலைபேசி மையங்களை உருவாக்கி தங்களை சிக்கல்களில் இருந்து தவிர்ப்பது. அடுத்தது காற்புணர்ச்சியோடு அழைப்புகளை ஏற்படத்தும் வாடிக்கையாளர்களோடு நேர்படப் பேசும் திறன் கொண்டவர்களாக பிலிப்பீனர்கள் தம்மை இனம்காட்டிக் கொண்டனர். அத்துடன் அமெரிக்க அழைப்பளர்களை லாவகமாகக் கையாள அமெரிக்க காலாச்சாரத்தையும் நன்கு அறிந்தவர்களாக பிலிப்பீனோக்கள் இருக்கிறார்கள். 
 
 
இதைவிடவும்  பிலிப்பீனர்கள் தமது பேச்சுப் பாணியை மாற்றாமல் பேசுவதனால் அமெரிக்கர்கள் நம்பிக்கையாக பிலிப்பைன்ஸ் தொலைபேசி மையங்களோடு உரையாடுகிறார்கள். விளைவு இந்தியாவில் தொலைபேசி மையங்களின் சக்கரவர்திகளாக இருக்கும் Infosys மற்றும் Tata consultancy  போன்றன தமது மையங்கள் பலவற்றை பிலிப்பைன்ஸ்சிற்கு குடிபெயர்த்தியுள்ளது. இவ்வகை தொடர் மாற்றங்கள் மூலம் 70% விதமான அமெரிக்க தொலைபேசி அழைப்புகளை கையாளும் நாடாக பிலிப்பைன்ஸ் இன்று மாறியுள்ளது.
 
 
பணமும் வேலைவாய்ப்பும் வளர்ந்தாலும் இந்த மையங்களில் வேலை புரிபவர்களோடு  பல்வேறு பிரச்சனைகளும் சேர்ந்தே வளர்கிறது. கண்விழிக்கும் அமெரிக்கர்களுடன் உரையாடுவதற்காக விழிமூடாமல் பணிபுரியும் தொலைபேசி மைய ஊழியர்கள் கடுமையாக இரவு முழுவதும் உழைத்த பின் அண்ணளவாக காலை 7:30 மணிக்கே உறங்கச் செல்கிறார்கள். பெருநகர் சாலைகளின் இரைச்சல்களும் வெப்பமும் இவர்களை சரியாகத் தூங்கவிடுவதில்லை. இதனால் தூக்கமின்மையால் வியாதி ஏற்படுவோரின் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தூக்கத்துக்கு மருந்தாக மதுபானத்தையும் போதைப் பொருட்களைம் பாவிக்கிறார்கள். மறுபுறம் வேலைக்காக தூர இடங்களில் இருந்து வந்து மாடிக்குடியிருப்புகளில் பகிர்ந்து வாழும் வேலையாட்கள் பலமாதங்களுக்கு தமது கணவன் மனைவியைப் பார்க்காமல் இருக்கிறார்கள் இப்படி இருக்கும் பொழுது தமது பாலியல் ரீதியான தேவைகளை  சக ஊழியர்களோடு வைத்துக்கொள்வதனால் HIV போன்ற நோய்த்தொற்றுதல்களுக்கு ஆளாகிறார்கள் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கவலை தெரிவிக்கிறது.
 
சொல்லப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் நுனிநாக்கு ஆங்கிலத்தின் மூலம் வாடிக்கையார்களை கவரும் இந்த ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் உடற்பயிற்சி நிலையம், கணினி கேளிக்கைகள் என பலவகை தற்காலிக இன்பங்களை வேலை செய்யும் பொழுதே வழங்குகின்றது. ஆனால் அறிமுகம் ஆகும் பேச்சுத்திறன் கொண்ட எந்திர மென்பொருட்கள் சிறிது சிறிது சிறிதாக உள் நுளைத்து இந்த தொலைபேசி மைபங்களின் தெரழிலாளர்களின் வேலை வாய்பை நிறுத்துவதற்கு பன்நாட்டு நிறுவனங்கள் சரியான நேரத்துக்காக காத்திருக்கின்றன. உறக்கம் இன்மை தொற்று வியாதி என பாதிக்கப்பட்ட பலரின் நிலை??? வீழ்ச்சி பெறும் வாழ்க்கைத்தரம் என பல தரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகிறார்கள் இவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஏதாவது பரிகாரம் வழங்குமா? இல்லை பிலிப்பையின் அரசுதான் பொதிசுமக்க வேண்டுமா?
 
என்ன இருந்தாலும் என் நாட்டு நிறுவனத்துக்கு வேலை பார்க்கலம் போல் இருக்கிறது.
சிவமணி

Share This Post

Post Comment