பேரறிவாளன் உட்பட ஏழு பேரை தமிழக அரசு காப்பாற்றவேண்டும்: வைகோ

Facebook Cover V02

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை தமிழக அரசு விடுவித்து அவர்களை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றவேண்டும் வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 161 வது சட்டப் பிரிவின் கீழ் தமிழக அரசுக்கே அவர்களை விடுவிக்க அதிகாரம் உள்ளது. ஆளுநர் மூலம் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், இதன் மூலம் மாநில சுயாட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செஞ்சியில் நடைபெற்ற மதிமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ செய்தியாளர் மத்தியில் தெரிவிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இப்போது நடைபெறும் அதிமுக ஆட்சி ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கிற, எதேச்சாதிகார, பாசிச மனப்பான்மை கொண்ட மக்கள் விரோத ஆட்சியாகும்.

மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை வாழ் மக்கள் மீளமுன்னர் கட்டவுட்டுக்கள், பதாதைகள் வைத்து போக்குவரத்துகளை ஸ்தம்பிக்க செய்து ஜெயலலிதா பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார்.

தமிழகத்தினை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றும் ஒன்றில் ஏதேச்சதிகாரமும், இன்னொன்றில் குடும்ப அரசியலும் நிலவுகிறது என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment