சோனியாகாந்தி 5 ஆம் தேதி சென்னை வருகை

ekuruvi-aiya8-X3

sonia_025சோனியாகாந்தி 5 ஆம் தேதி சென்னைக்கு வருவதையொட்டி, டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடைபெறும் தீவுத்திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை தீவுத்திடலில் வரும் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார கூட்டம் நடக்கிறது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகின்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ளவிருப்பதையொட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னைக்கு நேற்று வருகை தந்தனர். இவர்கள் சோனியாகாந்தி பேசவிருக்கும் தீவுத்திடல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடை, கார் நிறுத்தும் இடங்கள், செய்யப்பட்ட பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர்கள் அமரும் பகுதி, வேட்பாளர்கள் அமரும் பகுதி, வரவேற்பு அளிப்பவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் சென்னை விமான நிலையம் சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

தீவுத்திடலில் நடந்த ஆய்வின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுசெயலாளர் ஜோதி, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் சோனியாகாந்தியின் பாதுகாப்பு படை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

Share This Post

Post Comment