செய்னா நேவல் ‘நம்பர்–2’

24புதுடில்லி: உலக பாட்மின்டன் ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய வீராங்கனை செய்னா நேவல் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல், முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பைனல் வரை சென்ற சீனாவின் லி ஜுருய் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றினார். ஸ்பெயினின் மரின் கரோலிா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து, 12வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4வது இடத்தில் நீடிக்கிறார். ஆசிய பாட்மின்டனில் பட்டம் வென்ற சீனாவின் லின் டான், 2வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் காஷ்யப் 14வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் பிரனாய் 15வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி, 18வது இடத்தில் இருந்து 22வது இடத்துக்கு தள்ளப்பட்டது.






Related News

  • மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு
  • யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி
  • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
  • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
  • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
  • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
  • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
  • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *