சூரிய கிரகணம் இருளில் மூழ்கிய இந்தோனேசியா

ekuruvi-aiya8-X3

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் காட்சிகள் இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்தன. இதனை காண்பதற்காக ஏராளமான பயணிகள் அந்நாட்டுக்கு படையெடுத்தனர்.33 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் தெரிந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்நாட்டில் குவிந்தனர்.

ws_01_09இந்தோனேசியா மற்றும் பசிபிக் நாடுகளில் முழுமையாக ஏற்பட்டது. இந்தோனேசியாவில் பகல்நேரத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின அங்குள்ள ஆலிவியர் கடற்கரையில் திரளாக கூடிநின்ற பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

ஆஸ்திரேலியா மற்றும் ஒருசில தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த கிரகணம் தெரிந்தது. பார்வையாளர்களின் இருப்பிடத்தை பொருத்து இந்த கிரகணம் 90 வினாடிகள் முதல் 5 நிமிடங்கள் வரை தெரிந்தது.

Share This Post

Post Comment