சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்

பீட்ரூட்அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள். பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது.

கால்சியம் 18 மில்லி கிராமும் ெபாஸ்பரஸ் 5.5 மில்லி கிராமும், இரும்பு 10 மில்லி கிராமும், விட்டமின் சி 10 மில்லி கிராமும், விட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்தும், பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாரை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கலாம்.

குணப்படுத்தும்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை கூட்டும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்

 






Related News

  • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
  • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
  • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
  • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
  • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
  • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
  • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *