குடும்ப ஒன்றிணைவு (Family reunification) குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலம் அரைவாசியாகக் குறைக்கப்பட உள்ளது

Facebook Cover V02

walk-couple-300x200குடும்ப ஒன்றிணைவு (Family reunification) குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலம், தற்போதுள்ள 24 மாதங்களில் இருந்து அரைவாசியாகக் குறைக்கப்பட உள்ளதாகவும், படிப்படியாக இக்காலப்பகுதி ஆறு மாதங்களாகக் குறைக்கப்படும் எனவும் மத்திய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இவ்வறிவித்தலை டிசம்பர் 7 அன்று வெளியிட்டார்.

குடும்ப அங்கத்தவர் மற்றும் வாழ்க்கைத்துணை ஆகியோரின் இணைவிற்காகக் காத்திருக்கும் அநேகருக்கும், இனி வருங்காலங்களில் குடும்ப அங்கத்தவரையோ அல்லது வாழ்க்கைத்துணையையோ அனுசரணை மூலம் கனடாவிற்கு அழைத்துக் கொள்ள இருப்போருக்கும் இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும்.

இப்புதிய விண்ணப்பப் பரிசீலனைக் காலம், எற்கனவே விண்ணப்பங்களைப் சமர்ப்பித்தவர்களுக்கும், இனி வருங்காலங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இருப்பவர்களுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இரு வேறு விதமான வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் உருவாவதை குடிவரவுத் திணைக்களம் விரும்பவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Share This Post

Post Comment