கபாலியால் முறிந்தது பாகுபலி எந்திரன் சாதனைகள்

கபாலி திரைப்படம் பாகுபலி மற்றும் எந்திரன் திரைப் படங்களின் வசூல் சாதைனயை முறியடித்துள்ளது.

இயக்­குநர். பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே,தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கபாலி’திரைப்­படத்தை தாணு தயாரித்திருக் கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றி ருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.

கபாலி திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கபாலி தமிழகத்தில் ரூ. 100 கோடியும், பிற மாநிலங்களில் ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளது என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் உலக அளவில் அதிகபட்சமாக ரூ. 55 கோடியை பாகுபலி குவித்திருந்தது. கிட்டத்தட்ட இதைவிட இரண்டு மடங்கு வசூலை அதாவது ரூ. 104 கோடிகளை வசூலித்து ரஜினிதான் என்றும் இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்துள்ளது கபாலி. இந்நிலையில், அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது ‘கபாலி’. அவற்றின் ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல்நாள் மாலைவரை உள்ள வசூல் நிலவரப்படி சுமார் 2.4 மில்லியன் டொலர்களை குவித்திருக்கிறது. இந்த வசூலின் மூலமாகவே ‘எந்திரன்’ படத்தின் வசூலை மிஞ்சியிருக்கிறது ‘கபாலி’. அமெரிக்காவில் ‘எந்திரன்’ வியாபாரத்தை பிரீமியர் காட்சிகள் மற்றும் முதல்நாள் காட்சிகள் ஆகியவற்றின் மூல மாகவே ‘கபாலி’ முறியடித்திருக்கிறது. இந்­நி­லையில், இத்­தி­ரைப்­ப­டத்­தின் வசூல் குறித்து தயா­ரிப்­பாளர் தாணு தெரி­வித்­துள்­ள­தா­வது. ஒரு இந்திய நடிகரின் படம் இந்தளவுக்கு சாதனை புரிந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்றார்.

ஸ்டார் ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரால் மட்டுமே முடியும். சமூக விரோத சக்திகள் செய்யும் நாசகர செயல்தான் திருட்டு டிவிடி. ஆனால் வசூல் பாதிப்படையவில்லை” என்று இத்­தி­ரைப்­ப­டத்­தின் தயா­ரிப்­பாளர் தாணு தெரிவித்திருக்கிறார்

Share This Post

Post Comment