கனடாவில் சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Facebook Cover V02

can_seik-08கனடாவில் வசித்து வந்த சீக்கியர், 19 வயதான ககன்தீப் சிங் தாலிவால் தமது நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அப்போட்ஸ்போர்ட் பொலிஸார் இது தொடர்பாக குறிப்பிடுகையில், “ஞாயிறு இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ககன்தீப் சிங் தாலிவாலை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றனர்.

மேலும் “இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடத்தப்பட்டதென இதுவரையில் தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் ககன்தீப் சிங் தாலிவாலைத்தான் குறிவைத்துள்ளனர் எனத் தெரிகின்றது” என்றனர்.

ககன்தீப்சிங் தாலிவாலின் குடும்ப நண்பர் ஜாஸ்கர்ன் சிங் தாலிவால் கூறுகையில், “எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. யாரோ வந்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment