கனடாவில் இனி எளிதில் குடியுரிமை பெறலாம்.

ekuruvi-aiya8-X3

கனடா நாட்டில் வெளிநாட்டினர்கள் எளிதில் குடியுரிமை பெறுவதற்கு வசதியாக தற்போது உள்ள கடுமையான விதிமுறைகள் இன்னும் சில கிழமைகளில் நீக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் கொண்டு வந்து அமுலாக்கப்பட்ட C-24 என்ற சர்ச்சைக்குரிய புதிய சட்டம் அந்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.

இந்த சட்டம் அமுலாக்கப்பட்டதை தொடர்ந்து, கனடாவில் சட்டரீதியாக குடியுரிமை பெற்ற வெளிநாட்டு பிரஜைகளும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர்.

சிறிய குற்றங்கள் புரியும் வெளிநாட்டினர்களின் கனேடிய குடியுரிமையை பறித்து எவ்வித நீதிமன்ற விசாரணையும் இன்றி நாடுகடத்தும் அபாயம் உள்ள அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என அப்போதைய லிபரல் கட்சி பிரதம வேட்பாளரான ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ C-24 சட்டத்தை நீக்குவது பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், கனடா நாட்டின் குடியமர்வு துறை அமைச்சரான ஜோன் மெக்கல்லம் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அமைச்சர் பேசியபோது, ‘கனடாவில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவது தொடர்பிலான சட்டத்தில் புதிய மாற்றங்கள் இன்னும் ஒரு சில கிழமைகளில் கொண்டு வரப்படும்.

குறிப்பாக, குடியுரிமை பெறும் கால நேரத்தை வெகுவாக குறைக்கப்பட்டு, விரைவில் குடியுரிமை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

முந்திய கொன்செர்வேட்டிவ் கட்சி கொண்டு வந்த C-24 சட்டத்தின் மூலம் ஒருவரின் குடியுரிமையை பறிக்க முடியாதவாறு மாற்றம் கொண்டு வரப்படும்.

கனடாவில் குடியுரிமை பெற ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் மொழியை எளிதாக பேச வேண்டி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விதிமுறையை தளர்த்தி தற்போது புதிய மாற்றம் கொண்டு வரப்படும்.

மேலும், மொழி பரிசோதனையை மேற்கொள்பவர்களின் வயதை 16 முதல் 54 என்று இருந்ததை C-24 என்ற புதிய சட்டம் 14 முதல் 64 ஆக இருக்க வேண்டும் என உயர்த்தியது.

இதனை மாற்றி உண்மையான அதாவது 16 முதல் 54 வயதை சார்ந்தவர்கள் மட்டும் இந்த மொழி பரிசோதனை மேற்கொள்ள வழி வகுக்கப்படும்.

ஏனெனில், வயது அதிகமுள்ள முதியவர்களுக்கு ஆங்கில புலைமை அவசியம் இல்லை என லிபரல் கட்சி கருதுகிறது. மொழி பரிசோதனை தொடர்பான விவகாரத்தில் தற்போதைய அரசு அதிகம் கவனம் எடுத்துக்கொண்டு எளிதாக மாற்றம் கொண்டு வரும்.

குடியுரிமை எளிதாக பெறுவதற்கான இந்த மாற்றங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, ‘இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது ஒரு சில கிழமைகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நிச்சயமாக அதிக கிழமைகள் ஆகாது’ என அமைச்சர் ஜோன் மெக்கல்லம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment