ஐ.நா.வில் ஏ.ஆர். ரஹ்மான்

ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரஹ்­மானின் இசை நிகழ்ச்சி நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. இந்­தி­யாவின் 70ஆவது சுதந்­திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் திகதி ஐ.நா. சபையில் கொண்­டாட ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­யொட்டி சிறப்பு இசை நிகழ்ச்­சிக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அந்த இசை நிகழ்ச்­சியை பிர­பல இசை அமைப்­பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த உள்ளார். சர்­வ­தேச அளவில் 2 கிராமி விரு­துகள், 2 அகா­டமி விரு­துகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்­றுள்ள ஏ.ஆர்.ரஹ்மா­னுக்கு உலகம் முழு­வதும் இசை ரசி­கர்கள் உள்­ளனர்.

அவர் எழுப்­பிய ‘ஜெய்ஹோ’ பாடல் கோ‌ஷம் உலகின் பெரும்­பா­லான நாட்டு ரசி­கர்­களை கவர்ந்­தது. எனவே ஐ.நா. சபையில் ஆகஸ்ட் 15ஆம் திகதி அவர் நடத்தும் இசை நிகழ்ச்­சிக்கு இப்­போதே மிகுந்த எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அன்று ரஹ்­மானின் பாடல்­களை கேட்க 193 நாடு­களை சேர்ந்த உறுப்­பி­னர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்­ளனர். ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966ஆம் ஆண்டு பிர­பல கர்­நா­டக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி இசை நிகழ்ச்சி நடத்­தினார்.

அதன்­பி­றகு 50 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இப்­போ­துதான் இந்­தியர் ஒரு­வரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடை­பெற உள்­ளது. இந்த இரு சிறப்புகளையும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Related News

 • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
 • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
 • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *