ஐஸ்வர்யா ராய் தவறி விழுந்து காயம்

ekuruvi-aiya8-X3

aishwarya_raiபாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை இந்தியில் சினிமா படமாக தயாராகிறது. சரப்ஜித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர். பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று சந்தேகித்து இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்ட்டில் சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் தண்டனையை அரசு தள்ளி வைத்தது. இந்த நிலையில், ஜெயிலிலேயே சக கைதிகளால் சரப்ஜித் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் சரப்ஜித் படம் தயாராகிறது. இதில் சரப்ஜித் கதாபாத்திரத்தில் ரந்திப் ஹோடாவும் அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிக்கின்றனர். இப்படத்தை ஓமங்குமார் இயக்குநராக உள்ளார். இந்த படத்துக்காக ஐஸ்வர்யாராய் உடம்பை கருப்பாக்கி கிராமத்து பெண்ணாக மாறி கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. படத்துக்காக சண்டை காட்சியொன்றை படமாக்கினர்.

வில்லன்கள் துரத்த ஐஸ்வர்யாராய் ஓடுவது போல் இந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யாராய் திடீரென்று கால் இடறி கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். படக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்து வலி குறைந்த பிறகு மீண்டும் அவர் அந்த காட்சியில் நடித்து முடித்தார்.

Share This Post

Post Comment