என் வெளிநாட்டு சொத்துக் கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை – விஜய் மல்லையா

Facebook Cover V02

vijay_mallayaபல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சொத்து கணக்கை வருகிற 21–ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தும் அவரது திட்டத்தையும் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் விஜய் மல்லையா சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தன்னுடைய வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார். வங்கிகள் தனக்கு கடன் வழங்கும் போது வெளிநாட்டில் தனக்கு உள்ள சொத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், எனவே தற்பொது தன் வெளிநாட்டு சொத்துக்கணக்கை கேட்க வங்கிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Share This Post

Post Comment