உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதைப் படிங்க முதலில் !!

உடல் எடையைக் குறைக்க சிறந்த வழிகளுள் ஒன்று, உடலுக்கு ஏற்ற டயட்டைப் பின்பற்றுவது தான். அளவுக்கு அதிகமாக எண்ணெய் பொருட்களை சாப்பிடக் கூடாது.

fatman_15மற்றொன்று திரவ உணவுகளின் மூலம் எடையைக் குறைப்பது. அதில் உடல் எடையைக் குறைக்க உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில திரவ உணவினை தயார் செய்து சாப்பிடலாம். இவற்றை மதிய வேளையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். இதன் மூலம் உடல் எடையை மிகவும் வேகமாக குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2 கப்
பழங்கள் – 2 கப் (உங்களுக்கு பிடித்தது)
உலர் பழங்கள் – 1/4 கப்
நட்ஸ் – 1/4 கப்
பசலைக்கீரை – 1 கப்
ஓட்ஸ் – 1/4 கப்

செய்முறை: இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அதனை மதிய வேளையில் உணவிற்கு பதிலாக குடித்து வரலாம்.

தேவையான பொருட்கள்
பசலைக்கீரை – 1 கையளவு
பேரிக்காய் – 1/2
வாழைப்பழம் – 1
குளிர்ந்த பாதாம் பால் – 1 1/2 கப்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: பசலைக்கீரைiயை, பாதாம் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் வாழைப்பழம், தேன் மற்றும் பேரிக்காய் சேர்த்து நன்கு அரைத்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் – 1
கெட்டி தயிர் – 1/4 கப்
பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – சிறிது (தேவைப்படின்)

செய்முறை: முதலில் மிக்ஸியில் வேர்க்கடலை வெண்ணெய், கொக்கோ பவுடர், கெட்டி தயிர் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதன் மேல் பட்டைத் தூளை தூவி பருக வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.






Related News

  • கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை
  • நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள்
  • பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவம்
  • சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்
  • உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதைப் படிங்க முதலில் !!
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *